நான் 10 வருஷமா லாக்டவுன்ல இருக்கேன்... வடிவேலு சொன்ன புதுப்பட தகவல்

சென்னை : தமிழ் சினிமா வரலாற்றில் எந்த காலத்திலும், அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்படும் காமெடியன்களில் வடிவேலுவும் ஒருவர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அவர் நடித்த படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே பேசும்படியாக அமைந்தன.

இதற்கு காரணம் இம்சை அரசன் 24 ம் புலிக்கேசி படத்தில் இருந்து வடிவேலு பாதியில் வெளியேறியது தான். இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளரான டைரக்டர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளித்தார். இதனால் வடிவேலுவிற்கு ரெட் கார்ட் போடப்பட்டது.

Vadivelu to team up with another comedy hero in new movie

சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மக்கள் கடந்த ஒரு வருடமாகத் தான் லாக்டவுனில் உள்ளனர். ஆனால் நான் கடந்த 10 வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன் என்றார்.

ரெட் கார்டு விவகாரத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் வடிவேலு, தற்போது மீண்டும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே சூர்யா 40 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள வடிவேலுவிடம், வேறு சில படங்களில் நடிக்கவும் பேசப்பட்டு வருகிறது.

அதில் ஒன்று தான் சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில், திருமுருகன் இயக்கும் படம். இதற்கு முன் திருமுகன் இயக்கிய எம்டன் மகன் படத்தில் வடிவேலு நடித்துள்ளார். இந்த படத்தில் வடிவேலுவின் காமெடி செம ஹிட்டானது.

இந்த முறை காமெடி ஹீரோவான ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து வடிவேலு நடிக்க உள்ளார். இந்த படம் பற்றிய பல அறிவிப்புக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X