வடிவேலு தூதுவிட்டார்... நான்தான் அவர்கூட சேர மறுத்துட்டேன் - சிங்கமுத்து

By Shankar

சென்னை: தெனாலிராமன் படத்தில் தன்னுடன் சேர்ந்து நடிக்குமாறு வடிவேலு தூதுவிட்டதாகவும், அதனை தான் மறுத்துவிட்டதாகவும் நடிகர் சிங்கமுத்து கூறியுள்ளார்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை வடிவேலுவும், சிங்கமுத்துவும் இணைந்து நடித்த படங்கள், பார்வையாளர்கள் வயிற்றைப் பதம் பார்க்கும் அளவுக்கு சிரிப்பைத் தந்தன.

திமிரு படம்...

திமிரு படம்...

வடிவேலு குடித்து வைத்த குளிர்பான பாட்டில் குப்பை கூடைக்குள் விழுந்துவிட, அது தெரியாமல், அதே மாதிரி நிறத்தில் குளிர்பானம் குடித்துக் கொண்டிருக்கும் சிங்கமுத்து தன்னுடையதைத்தான் எடுத்து குடிப்பதாக சந்தேகித்து, 'மூத்திரத்தை குடிய்யா' என்று திட்ட, இருவரும் மோதிக் கொள்வது...

சீனா தானா படம்...

சீனா தானா படம்...

பஸ்சில் அமர்ந்திருக்கும் சிங்கமுத்துவிடம் வடிவேலு போதையில் வந்து பிக்பாக்கெட் அடிப்பார். பஸ்ஸிலும் போக முடியாமல், அப்படியே விட்டுவிட்டுப் போகவும் முடியாமல் சிங்கமுத்துவும் வடிவேலுவும் டாம் - ஜெர்ரி டைப்பில் துரத்துவது...

ஆணை படம்...

ஆணை படம்...

கடையில் வியாபாரம் செய்யும் சிங்கமுத்து என்ன வேண்டும் என கொஞ்சம் எகத்தாளமாக கேட்க, அதற்கு பதிலுக்கு எண்ண வேண்டும் என வடிவேலு கலாய்ப்பது...

இன்னொரு படத்தில்...

இன்னொரு படத்தில்...

வடிவேலு கடை முன் பிணத்தை போட்ட சிங்கமுத்து, கடைசியில் கடையையே எழுதி வாங்குவது என இவர்கள் நடித்த பல காமெடி காட்சிகள் பட்டையை கிளப்பின.

சண்டை

சண்டை

அதன்பிறகு, நில விவகாரத்தில் சிங்கமுத்து தன்னை கோடிக் கணக்கில் மோசடி செய்துவிட்டதாக வடிவேலு குற்றம்சாட்ட, இருவரும் கடும் சண்டையோடு பிரிந்தனர்.

சிங்கமுத்து கைது

சிங்கமுத்து கைது

வடிவேலு கொடுத்த புகாரில் கைதான சிங்கமுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு நடக்கிறது. இடையில் 3 ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமலே போய்விட்ட வடிவேலு இப்போது பெரிய படங்கள் இரண்டில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சந்தானத்துடன்

சந்தானத்துடன்

சிங்கமுத்துவோ, கூட்டணி மாறி கொஞ்ச நாள் சந்தானத்துடன் நடித்தார். இப்போது சந்தானமும் அவரைக் கழற்றிவிட்டுவிட்டார்.

வடிவேலு - சிங்கமுத்து சந்திப்பு

வடிவேலு - சிங்கமுத்து சந்திப்பு

இந்த நிலையில் சமீபத்தில் வடிவேலுவும் சிங்கமுத்துவும் யதேச்சையாக சந்தித்துக் கொண்டதாகவும், இருவரும் மனம்விட்டுப் பேசி விரோதங்களைக் களைந்து சமாதானமாகிவிட்டதாகவும் செய்திகள் பறந்தன.

ஆனால் சிங்கமுத்துவோ, வடிவேலுதான் தூது அனுப்பினார். நான் அவருடன் சேர மறுத்துவிட்டேன், என்று கூறியுள்ளார்.

அதிமுக கூட்டத்தில்

அதிமுக கூட்டத்தில்

வாழப்பாடியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் சிங்கமுத்து பேசுகையில், "என் மீது மோசடி புகார் தெரிவித்த நடிகர் வடிவேலு கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு பிரச்சாரம் செய்தார். சினிமாவில் இருந்த அவர் ஓரங்கப்பட்டு விட்டார். மீண்டும் சினிமாவில் என்னுடன் மீண்டும் இணைந்து நடிப்பதற்கு தூது விட்டார். அவருடன் சேர்ந்து நடிப்பதற்கு நான் மறுத்து விட்டேன்," என்றார்.

உண்மை என்னவோ...

உண்மை என்னவோ...

உண்மையில் சிங்கமுத்துதான் வடிவேலுவை தேடிப் போய், அம்மாவிடம் அழைத்துப் போகிறேன். எல்லாம் சரியாகிடும் என்று சொன்னதாகக் கூறுகிறார்கள்... உண்மை என்னவோ!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X