உதயநிதிக்கு 48 வயதா 58 வயதா?.. வடிவேலே குழம்பிட்டாரு.. காமெடி பண்றாரா கலாய்க்கிறாரானு தெரியலையே

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 49ஆவது பிறந்தநாளை கடந்த 27ஆம் தேதி கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் கொண்டாட்டங்கள் களைகட்டின. அந்தவகையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வடிவேலு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டுவருகிறது.

தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருந்த உதயநிதி ஸ்டாலின் முதன்முதலில் ஆதவன் படத்தில் சில நிமிடங்கள் தலை காட்டினார். அதற்கு பிறகு ராஜேஷ் இயக்கத்தி ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சந்தானத்தின் காமெடி துணையோடு ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. முதல் படத்துக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்துவந்த அவருக்கு மனிதன், நிமிர் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன.

மிஷ்கின், மகிழ் திருமேனியுடன்: தொடர்ந்து நடித்துவந்த அவர் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ, மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத்தலைவன் படங்களில் நடித்தார். இரண்டு படங்களும் உதயநிதியின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் அமைந்தன. இரண்டு படங்களுமே வணிக ரீதியாகவும் சூப்பர் வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் 2021ஆம் அண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக மாறினார் உதய்.

Vadivelu Trolls Udhayanidhi Stalin s Age on Stage Fans Ask Comedy or Sarcasm
Photo Credit:

கடைசி படம் மாமன்னன்: மக்கள் பிரதிநிதியாகிவிட்டதால் சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்த அவர்; கடைசி படத்தை தரமாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்தார். அவர் எதிர்பார்த்தபடியே அவருக்கும் நல்ல பெயர் கிடைத்தது; படமும் அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டது. அந்தப் படத்துக்கு பிறகு சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கிவிட்டார். இப்போது தமிழ்நாடு துணை முதலமைச்சராக பதவி வகித்துவருகிறார்.

49ஆவது பிறந்தநாள்: இந்நிலையில் அவர் தனது 49ஆவது பிறந்தநாளை கடந்த 27ஆம் தேதி கொண்டாடினார். அதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஆளுங்கட்சி சார்பில் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் களைகட்டின. ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அந்தவகையில் சென்னையில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் வைகை புயல் வடிவேலு கலந்துகொண்டார்.

வடிவேலு பேச்சு: அந்த விழாவில் பேசிய வடிவேலு, "உதயநிதி ஸ்டாலின் சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் இறங்கி மக்கள் பணி செய்துவருகிறார். மக்கள் பணி செய்ய ஆரம்பித்தவுடன் அவரது உருவம், பேச்சு என அத்தனையும் சினிமாவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரி இருக்கிறது. சினிமா பாணியை அவரது முகத்தில் பார்க்கவே முடியவில்லை" என்றார். மேலும் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா பாடலையும் பாடினார்.

48 வயதா 58 வயதா?: அதுமட்டுமின்றி அவர் பேசுகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 58ஐ கடந்து என்று ஆரம்பித்தார்; உடனே அருகில் இருந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், சேகர்பாபுவும் 48 என்று குறிப்பிட்டார்கள். அதற்கு வடிவேலு 58 எனக்கு என கூறிவிட்டு; 48ஐ கடந்து 59ல் அடியெடுத்து வைக்கும் அண்ணன் என்று கூற; மீண்டும் அருகில் இருந்தவர்கள் 49 என சுட்டிக்காட்ட; மறுபடியும் மறுபடியும் ஏன் அதையே பேசுறீங்க என சிரித்துக்கொண்டே கூறினார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, 'வடிவேலு காமெடி செய்கிறாரா இல்லை உதயநிதியை கலாய்க்கிறாரா' என கேள்வி எழுப்பி ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X