சோஷியல் மீடியா கிங் தலயோ, தளபதியோ அல்ல: வடிவேலு தான்
சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலு தான் சோஷியல் மீடியா கிங் என்று கூறலாம்.
வைகைப் புயல் வடிவேலு இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
24ம் புலிகேசி பட பிரச்சனை தொடர்பாக வடிவேலுவால் புதுப்படங்களில் நடிக்க முடியாமல் உள்ளது.
வடிவேலு
வடிவேலுவை சோஷியல் மீடியா கிங் என்றே கூறலாம். அவர் ட்விட்டரிலோ, ஃபேஸ்புக்கிலோ இல்லை. இருப்பினும் ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கம் போனால் வடிவேலுவின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் இல்லாமல் இருக்காது. எந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் வந்தாலும் அதை வடிவேலுவை வைத்து மாற்றி மீம்ஸ் போட்டுவிடுவார்கள்.
மன்னன்
மீம்ஸ் கிரியேட்டர்களின் கடவுள் வடிவேலு தான். யாரை கலாய்ப்பதாக இருந்தாலும் வடிவேலுவின் புகைப்படங்கள், வீடியோக்களை வைத்து தான் கிண்டல் செய்வார்கள். சில சமயங்களில் ஒரிஜினல் ஃபர்ஸ்ட் லுக்கை விட வடிவேலுவை வைத்து கலாய்த்து போட்ட ஃபர்ஸ்ட் லுக் அம்சமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
காதல்
படங்களுக்கு மட்டும் அல்ல வடிவேலு நடித்த காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் நிஜ வாழ்க்கை சூழலுக்கும் மிகவும் பொருந்தும். எடுத்துக்காட்டாக இந்த வீடியோவை கூறலாம்.
சிரிப்பு
எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் வடிவேலுவின் காமெடி வீடியோக்களை பார்த்தால் உடனே சிரிப்பு வந்துவிடும்.
பிறந்தநாள்
வடிவேலுவின் பிறந்தநாளை மீம்ஸ் கிரியேட்டர்கள் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சூப்பர் டீலக்ஸ்
விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வடிவேலு எப்படி இருக்கிறார்?
சிறப்பு
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர் வடிவேலு. எத்தனை நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் அவர் இடம் அவருக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











