24 ஆம் புலிகேசியான வடிவேலு!
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார்.
அதன் பின்னர் வடிவேலு ஹீரோ வேஷம் கட்டிய படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களுக்கு வில்லன்களாக மாறின. இடையில் அரசியலில் புகுந்து அங்கே கைப்புள்ளயாக்கி வீசப்பட்டார் வடிவேலு.

இப்போது ரீ என்ட்ரி ஆகியிருக்கும் வடிவேலு மீண்டும் இம்சை அரசனின் அடுத்த பாகத்தில் நடிக்கவிருக்கிறார். சிம்புதேவனே இயக்க ஷங்கரும் லைக்காவும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் வடிவேலு 24 ஆம் புலிகேசியாம். அதாவது 23 ஆம் புலிகேசிக்கு பிறக்கும் மகன்கள்தான் கதை மாந்தர்கள். 23 போலவே 24 லிலும் இரட்டை வடிவேலு. ஒன்று முழுக்க முழுக்க காமெடிக்கும்... இன்னொன்று சீரியஸ் கேரக்டர்.
இன்றைய ஃபேஸ்புக்,ட்விட்டர் என்று எல்லாவற்றையும் செமையாக கலாய்த்திருக்கிறாராம் சிம்புதேவன்.
சீக்கிரம் ஆரம்பிங்கய்யா...!


Click it and Unblock the Notifications











