Vadivealu: மாமன்னன் வடிவேலுவுக்கு ஆளுயர மாலை... வீடு தேடிச் சென்ற உதயநிதி, மாரி செல்வராஜ்

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி நடித்த மாமன்னன் கடந்த மாதம் 29ம் தேதி வெளியானது.

சாதி அரசியலை பின்னணியாக வைத்து சமூக நீதி பேசிய மாமன்னன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ்ஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளித்தார் உதயநிதி.

இந்நிலையில் தற்போது வைகைப்புயல் வடிவேலுவை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது மாமன்னன் படக்குழு.

 Vadivelu: Udhayanidhi thanked Vadivelu for the success of Maamannan

வடிவேலு வீடு தேடிச் சென்ற உதயநிதி: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் கடந்த 29ம் தேதி வெளியானது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதும் பாக்ஸ் ஆபிஸில் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. மாமன்னன் தான் தனது கடைசிப் படமாக இருக்கலாம் எனக் கூறியிருந்தார் உதயநிதி.

அதனால், மாமன்னன் படத்தின் வெற்றியை தொடர்ச்சியாக கொண்டாடிக் கொண்டே இருக்கிறார். முதலில் இயக்குநர் மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன் ஏஆர் ரஹ்மான் ஸ்டூடியோ சென்ற உதயநிதி, மாமன்னன் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார். அதன்பின்னர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாமன்னன் படத்தின் வெற்றியை கொண்டாடினார்.

 Vadivelu: Udhayanidhi thanked Vadivelu for the success of Maamannan

அதேபோல், இயக்குநர் மாரி செல்வராஜ்ஜுக்கு சுமார் 50 லட்சம் மதிப்புடைய மினி கூப்பர் கார் பரிசளித்தார் உதயநிதி. இதன் தொடர்ச்சியாக மாமன்னன் வெற்றியில் ரொம்பவே முக்கியமான நபரான வைகைப்புயல் வடிவேலுவை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்துள்ளார். உதயநிதியுடன் இயக்குநர் மாரி செல்வராஜ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் குழுவினரும் வடிவேலுவை நேரில் சந்தித்துள்ளனர்.

அப்போது வடிவேலுவுக்கு ஆளுயரை மாலை அணிவித்த உதயநிதி, அவருக்கு நன்றி தெரிவித்தார். வடிவேலுவை நேரில் சந்தித்த வீடியோவை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி, "தன் எதார்த்தமான தேர்ந்த நடிப்பால் மாமன்னன் திரைப்படத்தை மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய அண்ணன் வடிவேலு அவர்களை நேரில் சந்தித்து அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 Vadivelu: Udhayanidhi thanked Vadivelu for the success of Maamannan

வடிவேலுவுக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்துள்ள மாமன்னன், அவரது அடுத்த பாய்ச்சலை உறுதி செய்துள்ளது. இதுவரை காமெடி கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த வடிவேலுவுக்கு இது முற்றிலும் புதிய ஜானர் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X