Vadivelu: கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த முடியாத குற்றவுணர்ச்சி... மதுவில் மூழ்கினாரா வடிவேலு..?

சென்னை: கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் வடிவேலு கலந்துகொள்ளாதது மிகப் பெரிய சர்ச்சையானது. ஒருவேளை வடிவேலு வந்திருந்தாலும் அவர் மீது தாக்குதல் நடந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த முடியாத குற்றவுணர்ச்சியில் வடிவேலு மதுவுக்கு அடிமையாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேப்டன் மறைவு - குற்றவுணர்ச்சியில் வடிவேலு
தமிழ் சினிமாவில் மாபெரும் காமெடி கலைஞன் என பெயர் எடுத்தவர் வைகைப்புயல் வடிவேலு. ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த வடிவேலு, பின்னர் முன்னணி காமெடி நடிகராக வலம் வரத் தொடங்கினார். அவரது ஆரம்ப காலத்திலும் சரி, முன்னணி காமெடியனாக கலக்கிய போதும் சரி, வடிவேலுவுக்கு தனது படங்களில் வாய்ப்புக் கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த்.

 Vadivelu: Vadivelu addicted to alcohol... is guilty of not being able to pay tribute to Vijayakanth

அதுமட்டுமின்றி சின்ன கவுண்டர் படத்தில் நடித்த போது, வடிவேலுவிடம் நல்ல ட்ரஸ் இல்லை என்பதை அறிந்த விஜயகாந்த், அவருக்கு 6 செட் உடைகள் வாங்கியும் கொடுத்துள்ளார். இப்படி பல தருணங்களில் வடிவேலுவுக்கு உதவிகள் செய்தவர் விஜயகாந்த். ஆனால், இதையெல்லாம் மறந்த வடிவேலு, தேர்தலில் விஜயகாந்துக்கு எதிராக பேசி பிரச்சினையில் சிக்கினார்.

இதனால் பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்க முடியாமலும் வீட்டிலேயே முடங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன், விஜய், இளையராஜா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு கலந்துகொள்ளவில்லை.

விஜயகாந்த் உயிரிழந்த நாள் முதல் இப்போது வரையிலும் வடிவேலு விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தாதது பற்றி நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தொடர்ச்சியாக வடிவேலு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் வடிவேலு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாகத் தெரிகிறது. அவருக்கும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும் என விருப்பம் இருந்ததாம்.

ஆனால், நேரில் சென்றிருந்தால் விஜயகாந்த் ரசிகர்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என வடிவேலு பயந்துவிட்டார். அதனால் தான் வடிவேலு செல்லவில்லையாம். இருப்பினும் விஜயகாந்த் போன்ற மாமனிதனுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் போனதால், அதனை நினைத்து வீட்டுக்குள்ளேயே முடங்கிவிட்டாராம் வடிவேலு. அதுமட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக மது அருந்திவிட்டு விஜயகாந்தை நினைத்து புலம்பி வருகிறாராம். இப்படியே போனால் வடிவேலுவின் நிலை மோசமாகிவிடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X