Vadivelu: மாமன்னன் ரைமிங்கில் வடிவேலு, ஃபஹத் பாசில் பட டைட்டில்... டைமிங்காக வெளியான அப்டேட்!

சென்னை: மாமன்னன் படத்தில் எதிரும் புதிருமாக மிரட்டிய வடிவேலுவும் ஃபஹத் பாசிலும் மீண்டும் இணைந்துள்ளனர். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்தப் படம் ரோட் காமெடி ஜானரில் உருவாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாமன்னன் ஸ்டைலில் அடுத்த டைட்டில்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த வடிவேலு, மாமன்னன் படத்தில் அழுத்தமாக முத்திரை பதித்திருந்தார். இதுவரை காமெடியில் கலக்கிய வடிவேலுவுக்கு மாமன்னன் இன்னொரு அடையாளத்தை கொடுத்தது. வடிவேலுவுக்கு காமெடி மட்டுமே வரும் என நினைத்த ரசிகர்களுக்கு, எமோஷனலாகவும் நடிக்கத் தெரியும் என்பதை நிரூபித்திருந்தார்.

 Vadivelu: Vadivelu and Fahadh Faasils Road Comedy drama film titled Maareesan

அரசியல் பின்னணியில் உருவான மாமன்னன் படத்தில் வடிவேலுவுடன் உதயநிதி, ஃபஹத் பாசில் ஆகியோரும் லீடிங் கேரக்டரில் நடித்திருந்தனர். ரத்னவேல் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்திருந்தார் ஃபஹத் பாசில். இந்நிலையில் மாமன்னனில் மிரட்டிய வடிவேலு, ஃபஹத் பாசில் கூட்டணி, மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது. மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் என்பவர் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

 Vadivelu: Vadivelu and Fahadh Faasils Road Comedy drama film titled Maareesan

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 98வது படமாக உருவாகும் இதன் டைட்டில் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்துக்கு மாரீசன் என்ற டைட்டில் உறுதியாகியுள்ளது. மாமன்னன் வரிசையில் செம்ம ரைமிங்காக மாரீசன் என்ற டைட்டிலில் இந்தப் படம் உருவாகிறது.

ரோட் ட்ராவல் ஜானரில் காமெடி மூவியாக உருவாகும் மாரீசன், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தப் படத்தில் வடிவேலு ஜோடியாக 90ஸ் பிரபலம் சித்தாரா நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. புதுபுது அர்த்தங்கள், புது வசந்தம், புரியாத புதிர், படையப்பா போன்ற படங்களில் நடித்துள்ள சித்தாரா, நீண்ட இடைவேளைக்குப் பின்னர் லீடிங் ரோலில் நடிக்கவுள்ளார்.

அதேநேரம் ஃபஹத் பாசில் ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. டைட்டிலை தொடர்ந்து விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இன்று முதல் மாரீசன் படப்பிடிப்பு தொடங்குகிறது. 'ஒரு வேட்டை ஆரம்பம்' என்ற கேப்ஷனுடன் மாரீசன் டைட்டில் ட்ரெண்டாகி வருகிறது. குறுகிய காலத்தில் உருவாகும் மாரீசன் திரைப்படத்தை இந்தாண்டு சம்மர் அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X