Vadivelu: வடிவேலுவால் TakeOff ஆகும் அஜித்தின் விடாமுயற்சி... சந்திரமுகி 2வில் இப்படியொரு ட்விஸ்ட்டா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆன திரைப்படம் சந்திரமுகி.

இப்படத்தின் இரண்டாம் பாகம் பி வாசு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ளது.

 Vadivelu: Vadivelu comedy in Chandramukhi 2nd part is highly anticipated

ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், வடிவேலு காமெடி கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சந்திரமுகி 2வில் இடம்பெற்றுள்ள வடிவேலுவின் காமெடியால், அஜித்தின் விடாமுயற்சி Take-Off ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்திரமுகி 2 முதல் விமர்சனம்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. பி வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. முக்கியமாக ரஜினி - வடிவேலு கூட்டணியில் உருவான காமெடி, இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. அதேபோல், ஜோதிகாவும் சந்திரமுகி கேரக்டரில் மிரட்டியிருந்தார்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்தப் படத்தையும் பி வாசுவே இயக்கியுள்ள நிலையில், லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அதேநேரம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பதிலாக அவரது தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அதேபோல் ஜோதிகாவுக்குப் பதில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், லக்‌ஷ்மி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குறிப்பாக சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த வடிவேலு மட்டுமே இரண்டாவது பாகத்திலும் காமெடி ரோலில் நடித்துள்ளார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் என மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் வடிவேலு, தற்போது சந்திரமுகி 2-விலும் கலக்கவுள்ளார். சந்திரமுகி 2 செப்டம்பர் 19ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சந்திரமுகி 2ம் பாகத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன், எடிட்டிங் என அனைத்தையும் பி வாசு முடித்துவிட்டாராம். இதனையடுத்து இப்படத்தை லைகா தரப்பினருடன் இயக்குநர் பி வாசு, ராகவா லாரன்ஸ், வடிவேலு ஆகியோர் பார்த்துள்ளனர். அதன்பின்னர் ராகவா லாரன்ஸ், வடிவேலு காமெடி ரசிகர்களை நிச்சயமாக பதம் பார்க்கும் என லைகா தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்களாம். முதல் பாகத்தைப் போலவே சந்திரமுகி 2-வும் வடிவேலுவின் காமெடி பட்டாசு தான் அடித்துக் கூறியுள்ளனர்.

அதேபோல், கங்கனா ரனாவத்தின் நடிப்பும் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் என சொல்லப்படுகிறது. முக்கியமாக வடிவேலுவின் காமெடியை பார்த்த லைகா தரப்பினர், சந்திரமுகி 2-வை அவர்களே ரிலீஸ் செய்துவிடலாம் என திட்டமிட்டு வருகிறார்களாம். அப்படி ரிலீஸ் செய்து கல்லா கட்டிவிட்டால் அதனை வைத்தே அஜித்தின் விடாமுயற்சி படத்தை தொடங்கிவிடலாம் என லைகா திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகமொத்தம் இப்போது அஜித்தின் விடாமுயற்சி படம் உருவாவது வடிவேலுவின் காமெடியில் இருப்பதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X