Vadivelu: “செத்துப் போன கோபால் வருவான்..” சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு மரண கலாய்!
சென்னை: சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் லைகா தயாரிப்பில் உருவாகியுள்ளது. பி வாசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கேரக்டரில், அவருக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.
சந்திரமுகி 2 செப்டம்பர் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வடிவேலு, தனக்கே உரிய பாணியில் ஜாலியாக பேசி ரசிகர்களை கலங்கடித்துள்ளார்.

வடிவேலு மரண கலாய் : ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற திரைப்படம் சந்திரமுகி. ரஜினி, வடிவேலு, ஜோதிகா கூட்டணியில் ஹாரர் ப்ளஸ் காமெடி ஜானரில் உருவான சந்திரமுகி, இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் பி வாசு இயக்கியுள்ளார். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டாருக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அதேநேரம் காமெடி கேரக்டரில் வடிவேலு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், லக்ஷ்மி மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ராகவா லாரன்ஸ், வடிவேலு கூட்டணி காமெடியில் மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, இயக்குநர் பி வாசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ரசிகர்கள் முன்னிலையில் சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வடிவேலு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, மாமன்னனில் நடித்தது தனக்கு பெருமையாக இருந்ததாகவும், அந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டானதிலும் தனக்கு மகிழ்ச்சி என்றார். அதேபோல், சந்திரமுகி 2ம் பாகமும் சூப்பர் ஹிட் படமாக அமையும் என வடிவேலு நம்பிக்கையுடன் கூறினார்.
மேலும், ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2வில் நடித்துள்ளார். ஆனால் அவரும் ரஜினிகாந்த் மாதிரியே நடிப்பில் மிரட்டியுள்ளதாக தெரிவித்தார். சந்திரமுகி 2 படத்தில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என செய்தியாளர் கேட்டதற்கு, "அத நீங்க பி வாசு கிட்ட தான் கேட்கணும், அவருதான் இந்தப் படத்தோட டைரக்டர்" என செய்தியாளர்களையே கலாய்த்தார். அதேபோல், "சந்திரமுகி முதல் பாகத்தில் செத்துப் போன கோபால், 2ம் பாகத்தில் உயிருடன் வருவான். அத நீங்க தியேட்டர்ல போய் பாருங்க" என பங்கமாக கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











