Vadivelu: அது சின்ன உதவி தான்... ஆனால், வடிவேலு சொன்ன பதில்... மனமுடைந்து போன நடிகர்
சென்னை: பல வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கம்பேக் கொடுத்த வடிவேலு, மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இதில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், வடிவேலு குறித்து சக நடிகர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் வைரலாகி வருகின்றன.

வடிவேலு பதிலால் மனமுடைந்த நடிகர் : ராஜ்கிரண் இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தில் அறிமுகமான வடிவேலு, இன்று கோலிவுட்டின் காமெடி கிங்காக வலம் வருகிறார். காமெடி மட்டும் இல்லாமல் மீம்ஸ் கிங் என்ற பெயரும் வடிவேலுவுக்கு உண்டு. ரஜினி, விஜயகாந்த், விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்கள் உடன் காமெடியில் கூட்டணி அமைத்து கலங்கடித்துள்ளார்.
இந்நிலையில், சில வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் மாமன்னன் படத்தில் வடிவேலு தான் லீட் ரோலில் நடித்துள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
வடிவேலுவுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் வட்டம் இருந்தும் திரையுலகில் அவர் மீது பலரும் அதிருப்தியில் தான் உள்ளனர். ரொம்பவே ஏழ்மையான நிலையில் இன்று கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகிறார். ஆனாலும், சக நடிகர்கள், திரையுலகைச் சேர்ந்த யாரும் உதவிக் கேட்டால், முடியாது என மறுத்துவிடுவாராம் வடிவேலு. இதுகுறித்து ஏற்கனவே பல நடிகர்கள் தங்களது அனுபவங்களை தெரிவித்துள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது நடிகர் மீசை ராஜேந்திரனும் வடிவேலு குறித்து பேசியுள்ளார். அதில், சக நடிகர்களின் குழந்தைகள் படிப்பு செலவிற்கு ஐந்தாயிரம் ரூபாய் கடனாக கேட்டு வந்தால் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வாராம் வடிவேலு. மேலும் அவர்களிடம் தற்போது ஐந்தாயிரம் கேட்பாய் அடுத்தது ஐம்பதாயிரம் கேட்பாய் அடுத்த ஐந்து லட்சமா எனக் கூறி அசிங்கப்படுத்துவாராம்.
அதோடு இல்லாமல் இனி உனக்கு வாய்ப்பு கிடைக்காது, அப்படியே ஓடிவிடு எனவும் வடிவேலு கறாராக கூறிவிடுவார் என மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சிறுநீரகம் பாதித்திருந்த போண்டா மணியும் வடிவேலு அவ்வளவு சீக்கிரம் உதவ மாட்டார் எனக் கூறியிருந்தார். அதேபோல், தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய ராஜ்கிரணுக்கு உதவி செய்துவிட்டு அதை சொல்லிக்காட்டியுள்ளார் வடிவேலு. இதுவும் சர்ச்சையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











