Vadivelu: ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை காத்திருக்க வைத்த வடிவேலு... அண்ணனின் ஆட்டத்துக்கு ஒரே ஆப்பு
சென்னை: விஜய் - வடிவேலு கூட்டணியில் வெளியான காமெடி காட்சிகளுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிறகு வடிவேலு அதிகம் நடித்த டாப் ஹீரோ விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது படங்களில் வடிவேலுவின் காமெடி இருக்கும்படி ரொம்பவே கவனமாக இருப்பார் விஜய்.
அப்படியான விஜய்க்கே ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து விபூதி அடித்துள்ளாராம் வடிவேலு.

விஜய்க்கே தண்ணீ காட்டிய வடிவேலு: கோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விஜய் பிறந்தநாளான வரும் 22ம் தேதி வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இதனிடையே விஜய்யின் பெரும்பாலான படங்களில் அவருடன் காமெடியில் கலக்கியவர்கள் விவேக்கும் வடிவேலும் தான்.
ஒருகட்டத்தில் தனது படங்களில் வடிவேலு தொடர்ந்து நடிக்க வேண்டும் என விரும்பினார் விஜய். வசீகரா, பிரண்ட்ஸ், காவலன், சுறா, பகவதி போன்ற படங்கள் மிக முக்கியமானது. அதேபோல், பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி, வில்லு படங்களிலும் வடிவேலு காமெடியில் பங்கம் செய்திருப்பார். விஜய் - வடிவேலு இருவருக்கும் இடையேயான டைமிங், கவுண்டர், ரியாக்ஷன்ஸ் என அனைத்துமே ஆல்டைம் கிளாசிக்கல்.
அதேபோல், காதலன் படம் முதலே பிரபுதேவா - வடிவேலு கூட்டணி ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டது. இந்நிலையில், போக்கிரியை தொடர்ந்து வில்லு படத்திலும் விஜய், பிரபுதேவா, வடிவேலு கூட்டணி மீண்டும் இணைந்தது. பிரபுதேவா இயக்கிய இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வில்லு படப்பிடிப்பில் விஜய் - வடிவேலு காமெடி காட்சிகளை படமாக்கியுள்ளார் பிரபுதேவா.
மாட்டு வண்டியில் வரும் வடிவேலுவிடம் விஜய் லிஃப்ட் கேட்பது தான் அந்த சீன். அவுட்டோரில் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பிற்காக விஜய் சீக்கிரமாகவே ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிட்டாராம். 8 மணிக்கு ஷூட்டிங் என பிரபுதேவா டைம் பிக்ஸ் செய்துள்ளார். அதற்கேற்றபடி விஜய் 7 மணிக்கெல்லாம் வந்து மேக்கப் போட்டு ரெடியாகிவிட்டாராம். வடிவேலு வந்துவிட்டால் ஷூட்டிங் சென்றுவிடலாம் என விஜய்யும் பிரபுதேவாவும் காத்திருந்துள்ளனர்.
ஆனால், வடிவேலு ரொம்பவே சாகவாசமாக பொறுமையாக வந்துள்ளார். அவர் வரும் போது 9 மணிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. அப்போதும் கூட விஜய்யும் பிரபுதேவாவும் தனக்காக காத்திருப்பது தெரியாமல் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டிருந்தாராம். இதனால் டென்ஷனான விஜய், ஷூட்டிங்கை பேக்கப் செய்துவிட்டு ஹோட்டல் ரூம் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர் வடிவேலுவை பிரபுதேவா தனியாகக் கூட்டிச் சென்று இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு வந்தால் என்ன அர்த்தம் எனக் கேட்டுள்ளார். இனிமேல் இப்படியெல்லாம் வந்தால் வில்லு படத்தில் இருந்து தூக்கிவிடுவேன் என சொன்னபின்னரே வடிவேலு சரியான நேரத்துக்கு ஷூட்டிங் சென்றாராம். இருப்பினும் இந்த பிரச்சினையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் வடிவேலுவுக்கு தொடர்ந்து தனது படங்களில் நடிக்க வைத்துள்ளார் விஜய்.


Click it and Unblock the Notifications











