வந்துட்டான்யா, வந்துட்டான்யா: இந்த போஸ்டரில் மாஸ் தளபதியா, வடிவேலா?

By Siva

Recommended Video

அர்ஜுன் ரெட்டி வடிவேலு வெர்சன்-வீடியோ

சென்னை: விஜய் பிறந்தநாளையொட்டி ரசிகர் வடிவமைத்த போஸ்டரின் வடிவேலு வெர்ஷன் வந்தாச்சு.

24ம் புலிகேசி படம் பிரச்சனையான பிறகு வடிவேலு நடிக்காமல் உள்ளார். அவர் படங்களில் நடிக்காவிட்டாலும் ரசிகர்கள் யாரும் அவரை மறக்கவில்லை, மறக்கவும் முடியாது.

அண்மையில் கூட அவரின் நேசமணி கதாபாத்திரம் அதுவும் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நாளில் ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டானது. வடிவேலு நடிக்காவிட்டாலும் மீம்ஸ் கிரியேட்டர்களின் நிரந்தர கான்செப்டாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 தளபதி

தளபதி

எந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர், ட்ரெய்லர் வெளியானாலும் அதன் வடிவேலு வெர்ஷன் கண்டிப்பாக வரும். பல நேரங்களில் ஒரிஜினலை விட வடிவேலு வெர்ஷன் தான் மாஸாக இருக்கும். இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரின் ரசிகர் ஒருவர் டிசைன் செய்த போஸ்டரை ட்விட்டரில் பொதுவான டிபியாக வைத்துள்ளனர். அந்த போஸ்டரின் வடிவேலு வெர்ஷன் வந்துவிட்டது. சும்மா சொல்லக் கூடாது வடிவேலு கெத்தாகத் தான் இருக்கிறார்.

 மீம்ஸ் கிரியேட்டர்ஸ்

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்

தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலையும், செகண்ட் லுக் நள்ளிரவு 12 மணிக்குமே வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதையடுத்து அந்த போஸ்டர்களை எதிர்பார்த்து காத்துள்ளனர் விஜய் ரசிகர்கள். வடிவேலு ரசிகர்களும் கூட அந்த போஸ்டர்களுக்காகத் தான் வெயிட்டிங். பின்ன, வடிவேலு வெர்ஷன் போட வேண்டாமா?

ஆதித்ய வர்மா

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை இந்தியில் ஷாஹித் கபூரை வைத்து கபிர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்து இன்று வெளியிட்டுள்ளனர். மேலும் தமிழில் த்ருவ் விக்ரமை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் மற்றும் ஆதித்ய வர்மாவுக்கு நம்ம வடிவேலு டஃப் கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

காமெடி

வடிவேலு ஃபார் லைஃப் என்ற பெயரில் வெளியாகும் இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் யார் மனதையும் காயப்படுத்த அல்ல. மாறாக அனைவரையும் சிரிக்க வைக்கத் தான் இப்படி செய்கிறார்கள். வடிவேலு வெர்ஷன் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. வடிவேலு ராக்ஸ், தலைவன் ராக்ஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X