சிங்கமுத்து மீது வடிவேலு தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளி வைப்பு!

தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.7 கோடி வரை மோசடி செய்ததாக நடிகர் சிங்கமுத்து மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு.
மேலும், சிங்கமுத்து மீது தனியாக கிரிமினல் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார் வடிவேலு.
இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
Comments


Click it and Unblock the Notifications