மனசாட்சியே இல்லையா உனக்கு.. பத்து நாளுக்கு பிறகு தலையை காட்டிய வடிவேலு.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: கேப்டன் விஜயகாந்த் இறந்து இரண்டு வாரத்திற்கு மேலாகிவிட்ட நிலையில், சரத்குமார், சூர்யா, சிவகார்த்திகேயன் என ஒருவர் ஒருவராக விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர். ஆனால், நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது வாழ்க்கையின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவரை இதுவரை அஞ்சலி செலுத்தாது இணையத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், கலைஞர் 100விழாவில் அவர் கலந்து கொண்டது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

சில ஆண்டுகளாவே விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் இருந்து விலகி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இதனால், அவரது மனைவி பிரேமலதா மற்றும் அவரது சகோதர்கள் இருவரும் கட்சியை கவனித்து வந்தனர். இதையடுத்து கடந்த வாரம் விஜயகாந்திற்கு மூச்சுவிடுவதில் பிரச்சனை ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

Vadivelu who attended the kalaignar 100 was trolled by netizens

72 குண்டுகள் முழங்க மரியாதை: விஜயகாந்த்தின் உடல் சென்னை தீவுத்திடலில் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் மலரால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின், தேமுதிக கட்சி அலுவலத்தில் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் வரமுடியாத சில பிரபலங்கள் பலர் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கலைஞர் 100 விழா: அந்த வகையில் அஞ்சலி கார்த்தி, அவருடைய தந்தை சிவக்குமார், சூர்யா, சரத்குமார்,சிபி சக்கரவர்த்தி, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால், வடிவேலு மட்டும் இன்னமும் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகின்றனர். என்னத்தான் மன கசப்பு இருந்தாலும், இறப்புக்கூட வடிவேலு வராதது இணையத்தில் பெரிய அளவில் பேசு பொருளானது.

மனசாட்சியே இல்லையா: இந்நிலையில் சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், சூர்யா, கார்த்தி,தனுஷ்,பார்த்திபன், யோகி பாபு,வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோகினி, வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டு கலைஞரை புகழ்ந்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் வடிவேலு கலந்து கொண்டது, நெட்டிசன்களை கடுப்பாக்கியதால் மீண்டும் அவரை ட்ரோல் செய்ய தொடங்கி உள்ளனர். இணையத்தில் ஒரு நெட்டிசன்ஸ், இறப்பிற்கு வர முடியல இதுக்கு மட்டும் வர தெரியுதா? என்றும் ஒருத்தர் வீட்டு நல்ல காரியத்திற்கு போகவில்லை என்றால் கூட கெட்ட காரியத்திற்கு கட்டாயம் போக வேண்டும் என்று ஊருக்குள் சொல்வாங்க, துணி மணி எடுத்து கொடுத்து வளர்த்து ஆளாக்கியவர் இறப்புக்கு போக உங்களுக்கு மனசு வரவில்லையா என அடுத்தடுத்து கேள்விகளை கேட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X