மொட்ட தலையை தடவி பார்த்து கமெண்ட் அடித்த வடிவேலு.. எனக்கு எண்டே கிடையாதுடா!!

சென்னை: 80களில் தொடங்கி இன்று வரை காமெடி கிங் என்று போற்றப்படும் அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார் வடிவேலு.

ஆரம்ப காலத்தில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் வேறு எந்த ஒரு நடிகராக இருந்தாலும் நடித்திருப்பார்களா என்பதை சந்தேகம் தான்.

சமீபத்தில் ஏர்போட்டில் பணிபுரியும் ஊழியர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்ட வடிவேலு சில சேட்டைகளை செய்துள்ளார்.

இருக்கும் இடத்தில சிரிப்பு தான்

இருக்கும் இடத்தில சிரிப்பு தான்

80களில் தொடங்கி இன்று வரை அனைவரும் ரசிக்கும் படியான காமெடிகளில் கலக்கி வருகிறார் நடிகர் வடிவேலு. ஆரம்ப காலத்தில் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருந்த வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் வேறு நடிகராலும் ஈடு இணை செய்ய முடியாது. எப்போதும் துருதுருவென இருக்கும் நடிகர் வடிவேலுவின் ஆட்டிட்யூட் அனைவருக்கும் பிடித்த ஒன்று . எங்க இருந்தாலும் அந்த இடத்தை கலகலப்பாக வைத்துக் கொள்வதில் வல்லவர்.

மீம்ஸ் அரசன்

மீம்ஸ் அரசன்

சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், அதிலும் காமெடியில் கலக்கி இருப்பார் வைகை புயல் வடிவேலு. மீம்ஸ் அரசன் என்று சொல்லும் அளவிற்கு இவர் இல்லாத மீம்ஸ் கிடையாது. தனது சின்ன சின்ன செய்கையாலும், அசைவுகளாலும், குட்டி கவுண்டர் டயலாக்குகளாலும் அசால்டாக வயிறு வலிக்கும் வரை சிரிக்க வைத்து விடுவார் வடிவேலு .சில காரணத்திற்காக சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த வடிவேல் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வடிவேலு.

வெளிவந்த வீடியோ

வெளிவந்த வீடியோ

நாய் சேகர் படத்தை தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் வடிவேலு.

பார்த்திபன், பிரபுதேவா போன்ற நடிகர்களுடன் இவர் செய்யும் குறும்புக்கு அளவே இல்லை. இவர்களது காம்போவில் வெளிவந்த படங்களில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைக்க தவறுவதில்லை. சமீபத்தில் ஏர்போர்ட்டில் ரசிகர்களுடன் வடிவேலு செய்யும் அலப்பறை இணையத்தில் வெளிவந்துள்ளது.

எனக்கு எண்டே கிடையாது

எனக்கு எண்டே கிடையாது

ஏர்போர்ட்டில் இருக்கக்கூடிய ஊழியர்களிடம் சிரித்து, பேசி கலகலப்பாக இருந்த வடிவேலு அவர்களிடம் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். மொட்டை அடித்துள்ள ஒரு பெண்ணின் தலையை தடவி பார்த்து கமெண்ட் அடித்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார் வடிவேலு. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. எனக்கு எண்டே கிடையாதுடா என்று சொல்லும் வடிவேலு எங்கு சென்றாலும் சேட்டைக்கு எண்டே இல்லாமல் இருக்கின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X