“தலைவர் 169“ மாஸ்தான் போங்க... ரஜினியுடன் இணையும் பிரபல நடிகர் !

சென்னை : ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 திரைப்படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வரும் வேளையில், இப்படத்தில் இணைய உள்ள பிரபல நடிகர் குறித்து முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

'தலைவர் 169' படத்தின் ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை பக்கா பிளான் தயாராக உள்ளதாம். அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஷூட்டிங்கை படுவேகமாக முடித்து விட்டு அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறுப்படுகிறது.

அண்ணாத்த

அண்ணாத்த

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். சிறுத்தை சிவா படம் என்றாலே சென்டிமென்ட் தூக்கலாகவே இருக்கும், அதுபோலவே இந்த திரைப்படத்திலும் அண்ணா, தங்கை சென்டிமென்ட் மேலோங்கி இருந்தது.

கதை தேர்வில் கவனம்

கதை தேர்வில் கவனம்

இந்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இருப்பினும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்த பட தேர்வில் மிகவும் கவனமாக இருந்த ரஜினி பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.

தலைவர் 169

தலைவர் 169

அந்த வகையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தரமான அப்டேட்டை படக்குழு கடந்த வாரம் வெளியிட்டது. ரஜினி கோட்சூட் அணிந்து கெத்தாக போஸ் கொடுத்திருந்தார்.

ரஜினியுடன் இணையும் வடிவேலு

ரஜினியுடன் இணையும் வடிவேலு

தலைவர் 169 திரைப்படம் குறித்த அப்பேட்டுகள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் கசிந்து வரும் நேரத்தில் வைகை புயல் வடிவேலு இத்திரைப்படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திரமுகி படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இத்திரைப்படத்தில் இணைய உள்ளனர். நீண்ட ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சில படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X