சண்டை போட்ட இயக்குநருடன் சமாதானமான வடிவேலு.. அடுத்த படம் சும்மா அதிரவிடப் போகுது!
சென்னை: அரண்மனை 4 படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் சுந்தர். சி ஃபார்முக்கு வந்து விட்டார். அவர் இயக்கும் அடுத்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல ஆண்டுகளாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருந்த நிலையில், எப்படி இருவரும் சமாதானம் ஆனார்கள் என்பதே ஆச்சர்யமாக உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.
சுந்தர். சி இயக்கத்தில் பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விட்டத்தை பார்த்து படுக்க ஆரம்பித்து விடும் அனைத்து காமெடிகளையும் பேசி மகிழ்ந்து வருகின்றனர்.

தலைநகரம் படத்தில் நாய் சேகர் கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு ரெட் கார்டுக்கு பிறகு கம்பேக் கொடுத்த படத்திற்கே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என டைட்டில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாற்றிய மாமன்னன்: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்த வடிவேலுவுக்கு அந்த படம் கை கொடுக்கவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் படத்தில் கதையின் நாயகனே வடிவேலு தான் என்றதுமே ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிய நிலையில், படமும் பந்தயம் அடித்தது. அந்த படத்திற்கு பிறகு காமெடி நடிகராக வடிவேலு வருவாரா? இல்லை குணசித்ர நடிகராக மாறுவாரா என்கிற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.
சுந்தர்.சி வடிவேலு மோதல்: சுந்தர். சி இயக்கத்தில் ஆரம்பத்தில் கவுண்டமணி நடித்து வந்தார். அதன் பின்னர் வடிவேலு இணைந்து பல சூப்பர் ஹிட் காமெடி படங்களை கொடுத்தார். சுந்தர். சிக்கும் வடிவேலுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட பின்னர் தான் விவேக் மற்றும் சந்தானத்துடன் சுந்தர். சி டிராவல் செய்தார். சந்தானத்தை ஒரு படத்தில் சுந்தர். சி நடிக்க வைத்த நிலையில், தான் வடிவேலுவுக்கும் அவருக்கும் சண்டை வெடித்தது என சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர்.
மீண்டும் கூட்டணி: சமீபத்தில், குஷ்பு நடத்திய பேச்சுவார்த்தையில் பழசை எல்லாம் விட்டுத் தள்ளுங்க படம் பண்ணுவோம் என்றே வடிவேலு சொல்லி விட்டார் என்றும் அரண்மனை 4 படம் 100 கோடி வசூல் ஈட்டிய நிலையில், சுந்தர். சியின் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கப் போகிறார் என்கின்றனர். கண்டிப்பாக காமெடி இருக்கும் என்றும் ஆனால், அதையும் தாண்டிய ஒரு விஷயத்தை வடிவேலுவை வைத்து சுந்தர். சி செய்யப் போவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











