twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாங்களும் வருவோம்ல.. வெப் சிரீஸுக்கு வருகிறார், வைகைப் புயல்.. சுராஜ் இயக்கத்தில் அள்ளும் காமெடி!

    By
    |

    சென்னை: நடிகர் 'வைகைப் புயல்' வடிவேலு வெப்சிரீஸுக்கு வருகிறார். அவர் நடிக்க இருக்கும் காமெடி தொடர் பரபரப்பாகத் தயாராகி வருகிறது.

    சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி ஹீரோவாக நடித்த படம், தலைநகரம். இதில், நாய் சேகராக, வைகைப் புயல் வடிவேலு மிரட்டியிருந்தார்.

    இந்தப் படம் வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டாலும், இதன் காமெடி காட்சிகள் இப்போதும் குபீர் சிரிப்பை, குபுக்கென்று கொட்ட வைக்கும்.

    'அமிதாப் மாமா' டிவிட்டருக்கே வரலையாம்.. அது ஃபேக் அக்கவுண்டாம்.. பிரபல இயக்குநர் தகவல்!'அமிதாப் மாமா' டிவிட்டருக்கே வரலையாம்.. அது ஃபேக் அக்கவுண்டாம்.. பிரபல இயக்குநர் தகவல்!

    என்கவுன்டர் ஏகாம்பரம்

    என்கவுன்டர் ஏகாம்பரம்

    இதே போலதான் 'மருதமலை' படமும். இதையும் சுராஜ் இயக்கி இருந்தார். இதில் என்கவுன்டர் ஏகாம்பரமாக நடித்திருப்பார் வடிவேலு. இந்தப் படத்தின் காமெடி காட்சிகளும் அதிரிபுதிரிதான். பிறகு இந்த காம்பினேஷன் உடைந்தது. அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால் நடித்த கத்தி சண்டை படத்தில் சுராஜுடன் இணைந்தார் வடிவேலு. இதில் டாக்டர் பூத்ரியாக நடித்திருந்தார்.

    காமெடி படம்

    காமெடி படம்

    இந்தப் படத்தின் காமெடி காட்சிகளும் கவனிக்கப்பட்டன. இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடிக்கும் காமெடி படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த படம் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட வேண்டியது என்றும் நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள தடை காரணமாக, தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

    வெப் சீரிஸில் வடிவேலு

    வெப் சீரிஸில் வடிவேலு

    இதனால் வடிவேலு இல்லாமல் வேறு நடிகரை வைத்து படத்தை அவர் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் அப்போது, இதை மறுத்திருந்தார். 'வடிவேலுக்காகத்தான் காத்திருக்கிறேன். வேறு யாரையும் வைத்து இந்தப் படத்தை இயக்கவில்லை. விரைவில் இதன் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் வடிவேலு நடிப்பில் வெப்சீரிஸை சுராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

    ஒன்பது எபிசோடுகள்

    ஒன்பது எபிசோடுகள்

    இதுபற்றி இயக்குனர் சுராஜிடம் கேட்டபோது, உண்மைதான் என்றார். 'படத்துக்காக உருவாக்கப்பட்ட கதையை வெப்சிரீஸுக்காக மாற்றுகிறோம். மொத்தம் ஒன்பது எபிசோடுகள். மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. இப்போது ஸ்கிர்ப்ட் வேலை போய் கொண்டிருக்கிறது. அமேசான் பிரைமில் வெளியாகிறதா? ஹாட் ஸ்டாரா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றார்.

    English summary
    Vadivelu will make his digital debut soon, Suraj is going to direct that web series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X