விஜயகாந்தை போல விஜய்.. இம்சை அரசனுக்கு மீண்டும் முளைத்த அரசியல் கொடுக்கு.. ப்ளூ சட்டை மாறன் தாக்கு!

சென்னை: திமுகவின் நட்சத்திர பேச்சாளராக மாறி அரசியல் களத்தில் இதற்குமுன் விஜயகாந்தை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. மீண்டும் திமுக மேடையில் ஏறியுள்ள வடிவேலு இந்த முறை விஜய்யை எதிர்த்து பேசப் போகிறாரா என்கிற கேள்வியை ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு எழுப்பியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தின் மூலம் வடிவேலுவுக்கு மீண்டும் சினிமாவில் கம்பேக் கிடைத்தது. விஜயகாந்த் மறைவுக்கு செல்லாத வடிவேலுவை பலரும் விமர்சித்தனர். கருணாநிதியின் சமாதி புதுப்பிக்கப்பட்ட நிலையில், நடைபெற்ற விழாவில் பங்கேற்று இருந்தார் வடிவேலு.

Vijay Vadivelu Blue Sattai Maran

சமீபத்தில், பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வடிவேலு, அதைத் தொடர்ந்து திமுக மேடையிலும் ஏறி இந்தி திணிப்புக்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளார். அடுத்து விஜய்யை எதிர்த்து தான் பேசப் போகிறாரா என்கிற கேள்விகள் கிளம்பியுள்ளன.

விஜய்யை எதிர்க்கப்போகிறாரா வடிவேலு: விஜயகாந்த் உடன் பல படங்களில் நடித்து வந்த வடிவேலு அவரை எதிர்த்து ரொம்பவே மோசமான பிரச்சாரத்தை முன் வைத்தார். விஜய்யுடன் பல படங்களில் நடித்த வடிவேலு அவரை எதிர்க்கப் போகிறாரா என்கிற கேள்வியுடன் ப்ளூ சட்டை மாறன் ஒரு நீண்ட பதிவை போட்டுள்ளார்.

"இம்சை அரசனுக்கு மீண்டும் முளைத்த அரசியல் கொடுக்கு:

* இவர் காமடியாக பேசினால் வாக்குகள் விழும் என நம்பிய திமுக.. அப்போது தோல்வியை அடைந்தது.

* சின்னக் கவுண்டர் படத்தில் அரை டஜன் ஆடைகள் மற்றும் பணம் தந்து உதவினார் கேப்டன்.. பிறகு பல படங்களில் தன்னுடன் நடிக்க வைத்து வளர்த்து விட்டார்.

* வீட்டருகே நடந்த சாதாரண பார்க்கிங் பிரச்னையை மனதில் கொண்டு விஜயகாந்தை குடிகாரர் என மட்டம் தட்டி திமுக மேடையில் பேசினார் வடிவேலு.

* திமுகவின் பிரதான எதிரி ஜெயலலிதாவை விமர்சித்தால் டங்குவார் கிழிந்துவிடும் என்பதால்.. தனது பர்சனல் பகையை தீர்க்க கேப்டனை மட்டும் வசைபாடினார்.

* ஆனால் இவரை கண்டுகொள்ளாமல்‌.. லூஸில் விட்டார் விஜயகாந்த்.

* வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என சொன்னவர் விஜயகாந்த்.

* ஜெயலலிதா முதல்வரான பிறகு.. அரசியலில் காணாமல் போனார்.

* திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது.. அக்கட்சிக்காக பேசமாட்டார். ஆளுங்கட்சியாக இருந்தால்..தேர்தல் நேரத்தில் மட்டும் சுய ஆதாயத்திற்காக திமுக மேடைகளில் தலையை காட்டுவார்.

* தன்னை ஒருமையில் பேசி கிண்டல் செய்ததால் 'ராஜா' எனும் படத்தோடு இவரை நிரந்தரமாக புறக்கணித்து விட்டார் அஜித்.

* அஜித் ரசிகர்களின் வாக்குகளை பெற விரும்பும் திமுக..வடிவேலுவை மேடையேற்றுவது முரண்

* அன்று ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. இன்று மோடியையும் எதிர்க்க மாட்டார்.

* திமுகவை அரசியல் எதிரி எனக்கூறும் விஜய்யை எதிர்த்தால் இவரது டப்பா டான்ஸ் ஆடிவிடும்.

* ஆகவே.. அரண்மனை புலவர் போல முதல்வரை பாராட்டி பேசி..பொற்கிழி வாங்குவதோடு சரி.

* சினிமாவில் இவரது காமடி எடுபடாமல் போய் பல வருடங்களாகி விட்டது. பிரச்சாரத்தில் எப்படி எடுபடும்?

* தன்னுடன் பல வருடங்கள் இணைந்து நடித்த துணை நடிகர்கள் பலரின் கஷ்டத்திலும் உதவாத, அவர்களின் இறப்பிற்கும் செல்லாத.‌ இவரால் மக்களுக்கு என்ன பயன்?

* மாமன்னன் படத்தில் நடித்ததோடு இவரது சகவாசத்தை...உதயநிதி நிறுத்தியிருக்க வேண்டும்.

* திமுக எனும் கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியை விட்ட கதைதான் இது.

* இவரது வாய் ராசியால் மீண்டும் திமுக தோற்றால் அதற்கு திமுகவே பொறுப்பு." என வடிவேலு பிரசாரம் செய்தால் திமுக வெற்றி பெறாது என்றும் ஒரே போடாக போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X