கேங்கர்ஸ் வடிவேலு கம்பேக் கொடுத்தாரா?.. சுந்தர்.சிக்கு வெற்றி?.. ட்விட்டர் விமர்சனம் என்ன சொல்கிறது?

சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு நடித்திருக்கும் கேங்கர்ஸ் திரைப்படம் இன்று வெளியாகிறது. ஏற்கனவே சுந்தர் இயக்கியிருந்த மத கஜ ராஜா சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்ததால் அதே ஃபார்முடன் சுந்தர்.சி வருவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்தது. மேலும் நீண்ட காலத்துக்கு பிறகு வடிவேலு - சுந்தர். சி கூட்டணி இணைந்திருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்தவர்கள் கேங்கர்ஸ் குறித்து தங்களது விமர்சனத்தை ட்விட்டரில் வைத்திருக்கிறார்கள்.

மதுரையில் பிறந்து தமிழ் சினிமாவில் வைகை புயல் என்று பெயர் எடுத்தவர் வடிவேலு. தொடர்ந்து பல படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி சிம்மாசனத்தை பிடித்திருக்கிறார். அவரது காமெடியை ரசிக்காத தலைமுறையே இல்லை. அத்தனை தலைமுறையினரிடமும் மிக மிக நெருக்கமாகியிருக்கிறார் அவர். அவருக்கு திடீரென சில பஞ்சாயத்துகள் வர ஆரம்பித்தன. இதன் காரணமாக சினிமாவிலிருந்து சில ஆண்டுகள் விலகியிருக்கும் சூழலுக்கு அவர் தள்ளப்பட்டார்.

மீண்டும் மையம் கொண்ட வைகை புயல்: அவரை சுற்றி இருந்த பஞ்சாயத்துகள் அனைத்தும் தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் நடித்த படங்களில் மாமன்னன் திரைப்படம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்தில் அவரது நடிப்பு அட்டகாசமாக இருந்தது. அதனையடுத்து மீண்டும் ஃபார்முக்கு வந்த அவர் மாரீசன், கேங்கர்ஸ் ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் கேங்கர்ஸ் திரைப்படம் இன்று வெளியாகிறது.

சுந்தர்.சியுடன் கூட்டணி: கேங்கர்ஸ் திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கியிருக்கிறார். ஏற்கனவே சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு நடித்திருந்த வின்னர், கிரி, நகரம் மறுபக்கம் ஆகிய படங்களிலும், சுந்தர். சியுடன் வடிவேலு நடித்த தலைநகரம் உள்ளிட்ட படங்களிலும் இவர்களது கூட்டணி அல்டிமேட் ஹிட் அடித்தது. அந்த காமெடி காட்சிகளை இப்போது பார்த்தாலும் வயிறு வலிக்க அத்தனை பேரும் சிரிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்று வெளியாகியிருக்கும் கேங்கர்ஸ் படத்தில் அந்தக் கூட்டணி ஹிட்டடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பலமாகவே எழுந்திருக்கிறது.

Vadivelu s Gangers Movie Twitter Review

படம் பார்த்தவர்களின் விமர்சனம்: இந்நிலையில் கேங்கர்ஸ் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுவருகிறார்கள். அந்தவகையில் இந்த ரசிகர், "கேங்கர்ஸ் படத்துக்கு 5 மதிப்பெண்களுக்கு 3.5 மதிப்பெண் கொடுக்கலாம். முதல் பாதி டீசன்ட்டாக இருந்தது. ஆனால் இரண்டாம் பாதி மிக அருமையாக இருந்தது. பணத்தை திருடும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. வடிவேலு கம்பேக் கொடுத்திருக்கிறார். தான் நல்ல ஃபார்மில் இருப்பதாக இயக்குநர் சுந்தர். சி இதில் நிரூபித்திருக்கிறார். இந்த மாதிரியான காமெடி என்ட்டெர்டெயினரை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவரும் பாசிட்டிவ் விமர்சனம்தான்: இந்த ரசிகரும் படத்துக்கு 3.5 மதிப்பெண்கள் கொடுக்கலாம் என்றூ குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், 'பழைய வடிவேலு மீண்டும் வந்துவிட்டார். சுந்தர். சியும், வடிவேலுவும் இணைந்து அற்புதமாக நடித்திருக்கிறார்கள். இரண்டாம் பாதி அருமையாக இருக்கிறது. கேத்தரி தெரசா, மற்ற காமெடி ஆக்டர்களும் நல்ல பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். இது வடிவேலுவின் ஷோ" என்று தெரிவித்திருக்கிறார்.

சுந்தர். சியின் ஃபார்ம் தொடர்கிறது: மேற்கூறிய இரண்டு ரசிகர்கள் போல் இந்த ரசிகர் தனது எக்ஸ் பக்கத்தில், 'சுந்தர்.சியின் ஃபார்ம் தொடர்கிறது. காமெடி லெஜண்ட் வடிவேலு மீண்டும் வந்துவிட்டார். பல்வேறு கெட்டப்புகளில் வந்து சிரிக்க வைக்கிறார். தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றபடி சுந்தர்.சி தன்னை அப்டேட் செய்துகொண்டிருப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. கமர்ஷியல் படமாக இருந்தாலும் கொடுத்த காசுக்கு வொர்த். 5க்கு 3.25 மதிப்பெண்கள்" என்று கூறியிருக்கிறார்.

படம் ஹிட்தான் போல: இன்னொரு ரசிகரோ, 'சுந்தர். சியின் டெம்ப்ளேட்படி காமெடியுடன் முதல் பாதி நகர்கிறது.வடிவேலுதான் ஷோ ஸ்டீலர். அவர் படத்தில் பாடுகிறார், நடனமாடுகிறார், சண்டையிடுகிறார், கெட்டப்புகளை மாற்றுகிறார். 65 வயதில் அருமையாக காமெடி செய்கிறார். சுந்தர்.சிக்கு இது ஹாட்ரிக் வெற்றி" என்று தெரிவித்துள்ளார்.

இந்த ட்விட்டர் விமர்சனங்களை பார்த்த பலரும் கண்டிப்பாக கேங்கர்ஸ் திரைப்படம் ஹிட்தான்போல. சுந்தர்.சிக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்தது போல் வடிவேலு தரமான கம்பேக் கொடுத்திருக்கிறார் என்று சந்தோஷமாக கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X