அட கியர மாத்துப்பா.. சக்கைப்போடு போடும் வடிவேலு.. வெளியான மாரீசன் ட்ரெய்லர்

சென்னை: வடிவேலு திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அப்படி அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி வடிவேலுவுக்கு தரமான கம்பேக்கை கொடுத்தது. இப்போது ஃபகத் பாசிலுடன் மாரீசன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியிருக்கும் அப்படம் விரைவில் வெளியாக்விருக்கிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிற்து.

டி.ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி படத்தில் சிறிய ரோலில் முதலில் நடித்தார் வடிவேலு. அதற்கு பிறகு சொந்த ஊரான மதுரைக்கே சென்ற அவருக்கு ராஜ்கிரணின் அறிமுகம் கிடைத்தது.அதனை பயன்படுத்தி என் ராசாவின் மனசிலே படத்தில் முழுநேர நடிகராக அறிமுகமானார் அவர். முதல் படத்திலேயே தனது வெள்ளந்தியான நடிப்பு, வித்தியாசமான உடல் மொழியால் தனி முத்திரை பதித்தார். பிறகு கவுண்டமணி, செந்தில் காமெடிகளில் நடித்தார் வடிவேலு. ஒருகட்டத்தில் கவுண்டமணிக்கும், செந்திலுக்கும் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து வடிவேலுவுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

வலிக்கு மருந்து கொடுக்கும் வடிவேலு: வடிவேலு தனது காமெடியில் பிறரை உருவ கேலி செய்யாமல் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு காமெடி செய்தார். அது தமிழ்நாடு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக வடிவேலு இல்லாத படங்களே இல்லை என்ற நிலைமை உருவானது. ரஜினியேகூட சந்திரமுகி படத்தில் வடிவேலு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு. அதேபோல் வடிவேலு விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என பலருடன் நடித்து அதகளம் செய்திருக்கிறார்.

Vadivelu s Maareesan Movie Trailer was out now
Photo Credit:

இரண்டாவது இன்னிங்ஸ்: சூழல் நல்லபடியாக சென்றுகொண்டிருந்த நிலையில் அரசியல் மேடை ஏறினார் வடிவேலு. அப்படி அவர் ஏறிய மேடையால் அவரது கரியர் அதள பாதளத்துக்கு சென்றது. ஒருவழியாக அவரை சுற்றி எழுந்த பிரச்னைகள் எல்லாம் தீர்த்து வைக்கப்பட்டதை தொடர்ந்து நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மெகா ஹிட்டாகி வடிவேலுவை இன்னொரு பரிமாணத்தில் காண்பித்தது.

அடுத்தடுத்த படங்கள்: மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் கேங்கர்ஸ் படத்தில் நடித்தார் வடிவேலு. அந்த படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. இப்போது அவர் ஃபகத் பாசிலுடன் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் மாரீசன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து மாமன்னன் படத்தில் நடித்து அப்ளாஸை அள்ளியிருப்பதால் இந்தப் படத்திலும் எப்படி நடித்திருப்பார்கள் என்ற ஆவல் எழுந்திருக்கிறது.

வெளியான ட்ரெய்லர்: படமானது விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில்; படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கும்போது, படத்தில் வடிவேலு ஞாபக மறதி கொண்ட நபர் என்பதும்; அவரிடமிருக்கும் பணத்தை திருடுவதற்காக ஃபகத் பாசில் கூடவே பயணப்படுகிறார் என்பதும் தெரியவருகிறது. அதுமட்டுமின்றி ட்ரெய்லரில் ஏகப்பட்ட வசனங்கள் கொண்டாடும்படி அமைந்திருக்கின்றன. மேலும் வடிவேலுவின் நடிப்பும் அட்டகாசமாக இருக்கிறது. தற்போது இந்த ட்ரெய்லர் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X