வடிவேலுவின் மாரீசன்.. மாமன்னனை ஓவர் டேக் செய்ததா படம்?.. ட்விட்டர் விமர்சனம் சொல்வது என்ன?

சென்னை: வடிவேலுவின் நடிப்பில் கடைசியாக வெளியான மாமன்னன், கேங்கர்ஸ் ஆகிய இரண்டு படங்களிலுமே அவரது நடிப்பு அனைவராலும் ரசிக்கும்படியாக இருந்தது. அதிலும் மாமன்னன் படத்தில் வேறு மாதிரியான வடிவேலுவை காண்பித்திருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். இப்போது வடிவேலு மாரீசன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். படம் நாளை ரிலீஸாகவிருக்கும் நிலையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார் வடிவேலு. அந்தப் படம் தோல்வியடைந்தாலும் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருந்த மாமன்னன் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. எமோஷனலாகவும், சீரியஸாகவும் அந்தப் படத்தில் நடித்து அப்ளாஸை அள்ளினார். இப்படிப்பட்ட வடிவேலுவை திரையில் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டதாக கூறி; அவரையும் அவரது நடிப்பையும் கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

மாரீசன்: அடுத்ததாக நடித்த கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்கள் எல்லாம் அவருக்கு பெரிய பெயரை பெற்று தரவில்லை. இப்படிப்பட்ட நிலைமையில்தான் சுதீஷ் சங்கர் எழுதிய கதையை வி.கிருஷ்ணமூர்த்தி இயக்க; சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் மாரீசன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் ஃபகத் பாசில், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படமானது நாளை வெளியாகவிருக்கிறது.

Vadivelu s Maareesan Twitter Review Here are Full Details
Photo Credit:

பத்திரிகையாளர்களுக்கு திரையிடல்: சூழல் இப்படி இருக்க நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு மாரீசன் திரைப்பட்ம திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படம் பார்த்தவர்கள் தங்களது கருத்தினை எக்ஸ் பக்கத்தில் முன்வைத்திருக்கிறார்கள். அந்தவகையில் ஒருவர், "படம் ஸ்லோவாகத்தான் ஆரம்பித்தது. இடைவேளை காட்சி அருமையாக இருந்தது. இரண்டாவது பாதி பரபரப்பாக இருந்தது. படத்தின் முடிவில் வைத்திருந்த சோஷியல் மெசேஜ் நன்றாக இருந்தது. ஃபகத் பாசில் வழக்கம்போல் சிறப்பாக நடித்திருந்தாலும்; வடிவேலுதான் Steal the Show" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரைட்டிங் எல்லாம் சூப்பர்: படம் பார்த்த இன்னொருவர், 'ஒரு வயதானவரின் பயணமும், அதில் இருந்த எமோஷன், நகைச்சுவை, மறைந்த உண்மைகள் என அனைத்தும் நன்றாக இருந்தன. நடப்பதை நாம் முன்கூட்டியே அறியும்படி இருந்தாலும் ரைட்டிங், விஷுவல் எல்லாம் அருமையாக இருக்கின்றன. ஐந்து மதிப்பெண்களுக்கு 3.25 மதிப்பெண் கொடுக்கலாம்' என தெரிவித்திருக்கிறார்.

ஷார்ப் த்ரில்லர்: இவர்களை தொடர்ந்து இன்னொருவரோ, "முதல் பாதி ஸ்லோ கான்வெர்சேஷனோடு போகிறது. இரண்டாவது பாதி ஷார்ப் த்ரில்லராக மாறுகிறது. தனித்துவமான கதை சொல்லல் பாணி. ஐந்து மதிப்பெண்ணுக்கு 3.5 மதிப்பெண் கொடுக்கலாம்" என கூறியிருக்கிறார்.

மேலும் இன்னொருவர், "மாரீசன் திரைப்படம் வடிவேலுவின் மிகச்சிறந்த நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று. அவரும், ஃபகத் பாசிலும் கற்பனை செய்ய முடியாத நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஸ்க்ரீன்ப்ளேவும் அருமையாக இருக்கிறது. தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்" என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X