அட வடிவேலு மகனா இவர்.. யப்பா வேற லெவலுல இருக்காரே.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: வைகை புயல் என்று ரசிகர்களால் புகழப்படுபவர் வடிவேலு. சில பிரச்னைகளுக்கு பிறகு இப்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார் அவர். அப்படி அவர் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களில் மாமன்னன் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக அவருக்கு மிகச்சிறந்த பெயரையும் பெற்றுக்கொடுத்தது. சூழல் இப்படி இருக்க அவரது மகன் புகைப்படம் சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.

ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் வடிவேலு. தான் அறிமுகமான புதிதில் கவுண்டமணி, செந்தில் ஆகிய இருவருடன் சேர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். அவர்களுடன் சேர்ந்து நடித்தாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், உடல்மொழியாலும் பெரிதாகவே கவனத்தை ஈர்த்தார். அதனையடுத்து சோலோ காமெடியனாக உருவெடுத்த அவர் அவ்வப்போது விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். ஒருகட்டத்தில் விவேக்கைவிடவும் வடிவேலுவின் மார்க்கெட் அசுர வேகத்தில் வளர்ந்தது.

வடிவேலுதான்: வடிவேலுவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது அவர் இல்லாத படங்களே இல்லை. ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் கமிட்டானபோது இயக்குநர் பி.வாசுவிடம் முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கிவிடுங்கள் என்றும் கூறினார். படத்தில் கதையே இல்லாவிட்டாலும் அந்தப் படத்தில் வடிவேலு இருந்தால் கண்டிப்பாக ஹிட்டாகிவிடும் அல்லது வியாபாரம் ஆகிவிடும் என்ற நிலைதான் கோலிவுட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை இருந்தது.

Vadivelu s Son Photo Goes Trending on Social Media

பஞ்சாயத்து முற்றிய வடிவேலு: சூழல் இப்படி இருக்க அவருக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே மோதல் உருவானது. விஜயகாந்த்தை தாக்கி பேச வேண்டும் என்பதற்காக திமுகவின் மேடையில் ஏறினார் வடிவேலு. ஆனால் அதுவே அவருக்கு பலத்த அடியாக விழுந்தது. வடிவேலுவை வைத்து படம் எடுக்கவே பலரும் யோசித்தார்கள். ஒருகட்டத்தில் வடிவேலு முற்றிலுமாக சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார். இருந்தாலும் காமெடி சேனல்களில் வடிவேலுவின் காமெடிதான் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தன.

மாமன்னன் வடிவேலு: ஒருவழியாக வடிவேலுவை சுற்றியிருந்த பஞ்சாயத்துக்கள் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டன. அதனையடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து நடித்த சந்திரமுகி 2 படத்திலும் அவருக்கு பெரிதாக பெயர் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. அந்த சமயத்தில்தான் மாரி செல்வராஜ் மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி வடிவேலுவுக்கு சிறந்த பெயரை பெற்றுக்கொடுத்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் மாரீசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.

பெரிய எதிர்பார்ப்பு: இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தாலும் கேங்கர்ஸ் படத்தின் மீது அவர்களுக்கு கொஞ்சம் கூடுதலாகவே கவனம் இருக்கிறது. ஏனெனில் பல வருடங்கள் சுந்தர்.சியும், வடிவேலுவும் இணைந்திருக்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் காம்போவில் வெளியான வின்னர், கிரி, தலைநகரம், நகரம் உள்ளிட்ட படங்களின் காமெடி காட்சிகள் எல்லாம் பட்டையை கிளப்பக்கூடியவை. எனவே அந்த மேஜிக் இந்தப் படத்திலும் நிகழுமா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

ட்ரெண்டாகும் புகைப்படம்: இதற்கிடையே வடிவேலுவுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரை பெரிதாக கேமரா முன்பு வடிவேலு காட்டியதில்லை. ஏன் அவரது திருமணத்தின்போதுகூட குறிப்பிட்ட அளவு புகைப்படங்களே வெளியே வந்தன. அந்த அளவுக்கு தனது குடும்பத்தை பொத்தி பொத்தி பாதுகாப்பவர் வடிவேலு. இந்நிலையில் அவரது மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X