'வை ராஜா வை' படத்தில் லைன் கட்டி நிற்கும் வாரிசுகள்

By Siva

சென்னை: ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள வை ராஜா வை படத்தில் வாரிசு பட்டாளமே பணியாற்றியுள்ளது.

'3' படத்தை அடுத்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள படம் வை ராஜா வை. சூதாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் விவேக், டேனியல் பாலாஜி, காயத்ரி ரகுராம், மனோபாலா, எம்.எஸ், பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

கௌதம் கார்த்திக்

கௌதம் கார்த்திக்

கோலிவுட் வந்ததில் இருந்து வெற்றியை சுவைக்காத கௌதம் கார்த்திக் இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.

கெமிஸ்ட்ரி

கெமிஸ்ட்ரி

படத்தில் கௌதம், ப்ரியா ஆனந்த் இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியுள்ளதாம்.

தனுஷ்

தனுஷ்

மனைவியின் படத்தில் தனுஷ் கொக்கி குமாராக ஒரு காட்சியில் வந்துவிட்டு செல்கிறார்.

ரிலீஸ்

ரிலீஸ்

வை ராஜா வை ஏப்ரல் 24ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு பட்டாளம்

வாரிசு பட்டாளம்

வை ராஜா வை படத்தில் வாரிசு பட்டாளமே உள்ளது. படத்தை இயக்கியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள், ஹீரோ நடிகர் கார்த்திக்கின் மகன், இசையமைப்பாளர் யுவன் இசைஞானியின் மகன், காயத்ரி பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகள், பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி வைரமுத்துவின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X