இப்படி இருந்த நான் அப்படி ஆயிட்டேன் !!! - வாணி போஜன் இப்போ படு பிஸி

சென்னை : வெங்கட் பிரபு திரைப்படங்கள் என்றால் அதில் நண்பர்கள் கூட்டணியில் ஒருவராக இருப்பார் வைபவ். அவர் தெலுங்கு இயக்குனர் கொடண்டராமி ரெட்டியின் மகன் . வெங்கட் பிரபுவின் சரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். இருப்பினும் தெலுங்கு சினிமாவில் வைபவ்க்கு வாய்ப்பு சரியாக அமையாத காரணத்தால் தமிழ் சினிமா பக்கம் திசை திரும்பினார்.

தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்துவருகிறார். இவர் பல படங்களில் கௌரவ வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

 Vaibav and Vani bhojan on busy schedule

வைபவ் நடித்த "மேயாத மான்" திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைந்தது . அதன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து நான்கிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

வாணி போஜன் தமிழ் நாடகங்களின் மூலம் நன்கு அறியப்பட்டவர். குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "தெய்வ மகள் " தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர். தற்போது வாணி போஜன் நாடகங்களில் நடிப்பதை முழுவதுமாக நிறுத்தி விட்டார். அவ்வப்போது பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விருந்தாளியாக வந்து சென்ற வாணி போஜன் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

'மீக்கு மாத்ரமே செப்தா' எனும் படத்தில் நடித்து வரும் வாணி போஜன் தற்போது 'பெல்லீ சூப்லு' பட இயக்குனர் தருண் பாஸ்கர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழில் NH4 என்ற திரைபடம் மூலம் அறிமுகமாகிறார். இதில் ஒரு மீனவ பெண்ணாக நடிக்கிறார் வாணி போஜன். இது தான் அவர் அறிமுகமாகும் முதல் படம். இந்த படத்திற்கு பிறகு தமிழில் 'ஓ மை கடவுளே' படத்தில் அசோக் செல்வனுடன் நடித்து வருகிறார்.

தற்போது வைபவும் வாணி போஜனும் இணைந்து 'லாக்கப்' என்ற படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் முதல் பார்வையை ட்விட்டரில் ரிலீஸ் செய்திருக்கிறார் 'தனி ஒருவன்' படத்தின் இயக்குனர் மோகன் ராஜா. இந்த படத்தை நித்தின் சத்யா தயாரிக்கிறார். நித்தின் சத்யா சென்னை28 படங்களின் மூலம் நமக்கெல்லாம் அறிமுகமானவர். அதற்கு பிறகு பல படங்களில் நடித்திருப்பார். இவர் 'லாக்கப்' படத்தை தயாரிக்கும் முன்னரே ஜெய்யின் 'ஜருகண்டி' படத்தை தயாரித்து இருந்தார் அந்த படத்திற்கு பிறகு 'லாக்கப்' படத்தை தயாரித்து வருகிறார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கி வரும் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார் ஆரோல் கொரலி.

படத்தில் வைபவ், வாணி போஜன் உடன் ஷம்னா கசிம், ஈஸ்வரி ராவ் மற்றும் வெங்கட் பிரபு முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படம் மூலம் வைபவ் மற்றும் வாணி போஜன் இருவருக்கும் மேலும் மேலும் பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X