வைபவ் நடிக்கும் ஃபேன்டஸி திரைப்படம் - "ஆலம்பனா"

சென்னை : 'ஆலம்பனா' நான் உங்கள் அடிமை!!! இந்த வசனத்தை 80 களில் பிறந்தவர்கள் நிச்சயம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு நம் மனதோடு ஒன்றிப்போன ஒரு வசனம் "அலாவுதீன் அற்புத விளக்கு" திரைப்படத்தின் வரும் வசனம் தான். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் வகை திரைப்படம் "ஃபேன்டஸி திரைப்படம் .

இன்று ஆக்ஷன், திரில்லர், நகைச்சுவை திரைப்படங்கள் பெருகிவிட்ட காலத்தில் ஃபேன்டஸி திரைப்படம் என்பது மிகவும் குறைவு. எனவே ரசிகர்களுக்கு விருந்தாக அமைக்கும் நோக்கில் ஒரு ஃபேன்டஸி திரைப்படத்தை எழுதி இயக்க உள்ளார் அறிமுக இயக்குனர் பாரி.கே.விஜய்.

VAIBAV IS TO ACT IN FANTASY MOVIE

"இன்று நேற்று நாளை", "முண்டாசுப்பட்டி" உள்ளிட்ட திரைப்படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்த பாரி.கே. விஜய் இப்போதய ட்ரெண்டிற்கு ஏற்றவாறு ஒரு வித்யாசமான மேஜிக்கல் கதையம்சத்தில் "ஆலம்பனா" திரைப்படத்தை உருவாக்கவுள்ளார். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் வகையில் எடுக்கப்படவிருக்கிறது. ஹிப்ஹாப் தமிழா இசைஅமைப்பில் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

சூப்பர்ஹிட் திரைப்படமான 'விஸ்வாசம்' திரைப்படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிப்பாளர் சந்துருவுடன் இனைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் வைபவ் மற்றும் அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். இவர் என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் பிரபலமானவர். வைபவ் இதுவரையில் நடிக்காத ஒரு வித்யாசமான ஒரு கதையம்சத்தில் நடிக்க உள்ளார். மேலும் இதுவே வைபவ் இதுவரையில் நடித்த திரைப்படங்களிலேயே அதிக பட்ஜெட் செலவு செய்து எடுக்கப்படும் படமாகும்.

இப்படத்தில் ஆனந்தராஜ், முனீஷ்காந்த், காளிவெங்கட், திண்டுக்கல் ஐ லியோனி. கபீர் சிங்க், முரளி கர்ம லிடோ உக்கிய அதைப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்படவிருக்கிறது என்று தெரிவித்துள்ளனர் பட குழுவினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X