twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவகார்த்திகேயன் கை விட்டார்.. அவர் விட்டதை வைபவ் பிடித்துக்கொண்டார்!

    வைபவ் நடிக்கும் படத்திற்கு டாணா என டைட்டில் வைத்துள்ளனர்.

    |

    சென்னை: நடிகர் வைபவ் நடிக்கும் திரைப்படத்திற்கு "டாணா" என தலைப்பு வைத்துள்ளனர்.

    நடிகர் வைபவ் வளர்ந்துவரும் முக்கிய நடிகர்களில் ஒருவராக உள்ளார். கடைசியாக இவர் நடித்த மேயாதமான் திரைப்படம் நன்கு பேசப்பட்டது. இவர் இப்போது ஆர்கே.நகர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    Vaibav upcoming movie title!

    வைபவ் அடுத்ததாக நடிக்கும் படத்தை இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த யுவராஜ் இயக்குகிறார். இப்படத்தில் நந்திதா கதாநாயகியாக நடிக்கிறார்.

    இப்படத்திற்கு "டாணா" என பெயரிட்டுள்ளனர். போலீஸ்காரர்களை டாணாக்கார் என அழைக்கும் வழக்கம் சில பகுதிகளில் இன்றும்உள்ளது. அதனால் இந்த பெயரை வைத்துள்ளனர்.

    இப்படத்தில் நடிகர் பாண்டியராஜன் வைபவ்வின் அப்பாவாக நடிக்கிறார். பாண்டியாஜனின் அப்பா, தாத்தா என அனைவரும் காவல்துறையில் பணியாற்றியவர்கள். அதனால் மகன் வைபவ்வையும் போலீஸ் அடிகாரியாக மாற்ற வேண்டுமென பாண்டியராஜன் ஆசைப்படுகிறார். அது நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதையாக உள்ளதாம்.

    இப்படத்தில் வில்லனாக விக்ரம் வேதாவில் சேட்டாவாக கலக்கிய மலையாள நடிகர் ஹரிஷ் பெரேடி நடிக்கிறார். இவர்களுடன், யோகிபாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் எழுபது சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    டாணா என்கிற இந்த டைட்டில் முதலில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை திரைப்படத்திற்கு வைத்தனர். சில காரணங்களால் பிறகு இந்த பெயர் மாற்றப்பட்டது நினைவிருக்கலாம்.

    English summary
    Actor Vaibav upcoming movie is titled as “Taana”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X