குழந்தைகளை குஷிபடுத்துமாம்.. காமெடி ஃபேன்டஸி 'ஆலம்பனா' ஷூட்டிங் நிறைவு.. படக்குழு மகிழ்ச்சி!
சென்னை: ஃபேன்டஸி படமான 'ஆலம்பனா' ஷூட்டிங், நிறைவடைந்து விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வைபவ், பார்வதி நாயர் நடிக்கும் படம், ஆலம்பனா. இதை, அறிமுக இயக்குனர் பாரி கே.விஜய் இயக்குகிறார்.
இவர், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

ஃபேன்டஸி கான்செப்ட்
இந்தப் படத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி சர்மா, கபீர் சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் அரண்மனை, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கியுள்ளனர். ஃபேன்டஸி கான்செப்ட் படம் என்பதால் படக்குழுவினர் மிகவும் சிரமத்துடன் உருவாக்கியுள்ளனர்.

கேக் வெட்டி
வைபவ் நடித்துள்ள படங்களில், இதுதான் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக பணிபுரிந்து வருகிறார்கள்.

ஹிப் ஹாப் ஆதி
விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், பாடல்களையும் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. ஹிப் ஹாப் ஆதி இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெய்ன் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளை பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மீண்டு சகஜ நிலைக்குத் திரும்பியுள்ள மக்களை, சிரிப்பு மழையில் இந்த படம் நனைய வைக்கும் என்கிறது படக்குழு. குழந்தைகளை குஷிப்படுத்தும் படமாகவும் இது இருக்கும் என்று கூறுகிறார்கள். இதை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் சந்துரு இணைந்து தயாரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











