கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வைபவ் நடிக்கும் புதிய திரைப்படத்தின்ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

சென்னை : நடிகர் வைபவ் இப்பொழுது ஆலம்பனா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரும்பாலான இளம் இயக்குனர்களின் முதல் சாய்ஸாக இருந்து வரும் வைபவ் நடித்துள்ள காட்டேரி நீண்ட காலமாக வெளியாகாமல் வெயிட்டிங்கில் உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்க நடிகர் வைபவ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் இப்போது வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகிறது.

ஸ்டோன் பென்ஸ் நிறுவனம்

ஸ்டோன் பென்ஸ் நிறுவனம்

கேங்ஸ்டர் திரைப்படங்களையும் வித்தியாசமான கோணங்களில் இயக்கி தொடர்ந்து தமிழ் சினிமாவில் சிறந்த இளம் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் கார்த்திக் சுப்பராஜ் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். அவியல், மேயாதமான், கள்ளச்சிரிப்பு, பெண் குயின் மற்றும் சமீபத்தில் வெளியான ட்ரிபிள்ஸ் போன்ற படைப்புகளை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

கேங்ஸ்டர் கதைக்களத்தை

கேங்ஸ்டர் கதைக்களத்தை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்திற்கு பிறகு தனுஷின் ஜகமே தந்திரம் படத்தை இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் அதைத் தொடர்ந்து தற்போது விக்ரமின் 60வது படத்தை இயக்கிவருகிறார். இதில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்து வர இந்த படமும் கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

பபூன்

பபூன்

பெரும்பாலான அறிமுக இயக்குனர்களின் முதல் சாய்ஸாக இருந்து வரும் நடிகர் வைபவ் ஏற்கனவே இன்று நேற்று நாளை படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய பாரி கே விஜய் இயக்கத்தில் ஆலம்பனா என்ற ஃபேண்டசி திரைப்படத்தில் அலாவுதீனாக நடித்து வர இப்பொழுது அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கும் திரைப்படத்தில் பபூன் ஆக நடிக்க தலைப்பும் பபூன் என வைக்கப்பட்டுள்ளது.

கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட்

கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட்


இந்த நிலையில் தற்போது பபூன் படத்தின் கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் வைபவ் தெருக்கூத்து பபூன் கலைஞர் வேகத்தில் மேடையில் மைக்கின் முன்னால் நின்று கொண்டு பார்வையாளர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்ட வாறு உள்ளார். மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக அனகா நடித்து வார சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X