முனிஷ்காந்த் தான் பூதமா.. வைபவ்வின் ஆலம்பனா மேஜிக் செய்யுமா?
இயக்குநர் ராம்குமாரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாரி கே. விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி நாயர், முனிஷ்காந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஆலம்பனா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.சென்னை: மு
சென்னை: முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை இயக்கிய இயக்குநர் ராம்குமாரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாரி கே. விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி நாயர், முனிஷ்காந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஆலம்பனா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

ஆர்.கே.நகர், சிக்சர் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் வைபப் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி நாயர் இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களில் தனது நடிப்பு திறமையால் அசத்திய முனிஷ்காந்தும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
அலாவுதினும் அற்புத விளக்கும் படத்தில் வரும் அற்புத விளக்கை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வைத்து ஆலம்பனா என்ற தலைப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
வைபவ் அலாவுதினாக இந்த படத்தில் நடித்தால், பூதமாக முனிஷ்காந்த் நடிக்க வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ராட்சசன் இயக்குநர் ராம் குமார், முண்டாசுப்பட்டி படத்தில் பணிபுரிந்த 5வது நபர் இயக்குநராக அறிமுகமாவதில் மிகவும் சந்தோஷமடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இந்தியன் 2 படத்திற்கு ஸ்டன்ட் செய்து வரும் பீட்டர் ஹெயின் மாஸ்டர் இந்த படத்தில் இணைந்திருப்பதால், ஸ்டன்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இந்த படத்தில் இருக்கும் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











