சீதக்காதி.. விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்!

நடிகர் வைபவ்வின் அண்ணன் சுனில் சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதியின் வில்லனாக நடித்துள்ளார்.

Recommended Video

விஜய் சேதுபதிக்கு வில்லனாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் அண்ணன்- வீடியோ

சென்னை: சீதக்காதி படத்தின் மூலம் நடிகர் வைபவ்வின் அண்ணன் சுனில் வில்லனாக அறிமுகமாகிறார்.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் சீதக்காதி. விஜய் சேதுபதி இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார்.

டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், நடிகை அர்ச்சனா, இயக்குனர் மகேந்திரன், மௌலி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் டிரெய்லர் நாளை ரிலீசாகிறது.

இந்நிலையில், படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிப்பது யார் என்பது தெரியவந்துள்ளது. புதுமுகமான அவரது பெயர் சுனில். இவர் வேறு யாருமல்ல. நடிகர் வைபவின் மூத்த சகோதரர் தான்.

பெரிய சவால்:

பெரிய சவால்:

அவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. வில்லன் சுனில் குறித்து இயக்குனர் பாலாஜி தரணிதரன் கூறியதாவது," உண்மையில், இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகரை கண்டுபிடிப்பது மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது. இது கதாபாத்திரத்தின் இயல்பு அதற்கு முக்கிய காரணம். திரைக்கதையை எழுதும்போதே, இந்த கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இல்லாமல், புதுமையாக இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை இருந்தது.

பிரபலமான நடிகர்கள்:

பிரபலமான நடிகர்கள்:

இந்த கதாபாத்திரம் உங்களை வெறுப்புக்கு ஆளாக்காமல், சிறு புன்னகைக்கு ஆட்படுத்தும். தோற்றத்தை பொறுத்தவரை சில அசாதாரண தேர்வுகளை செய்தோம். இந்த கதாபாத்திரத்துக்கு நாங்கள் சில பிரபலமான பெயர்களை கூட பரிசீலனை செய்தோம். அவர்களுக்கு கதாபாத்திரம் பிடித்திருந்தாலும் அவர்களது கால சூழலால் இதை செய்ய முடியவில்லை.

ஆடிஷன்:

ஆடிஷன்:

ஒரு எதிர்பாராத திருப்புமுனையாக நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில் அவர்களை ஒரு பிறந்த நாள் விழாவில் சந்தித்தேன். உடனடியாக என் வில்லனை அங்கு கண்டேன். ஆடிஷன் செய்ய அவருக்கு தயக்கம் இருந்தது. இறுதியில் அந்த முயற்சியை மேற்கொண்டார். அந்த கதாபாத்திரத்தில் பொருந்தினார்.

கனமான பாத்திரம்:

கனமான பாத்திரம்:

குறுகிய கால நடிப்பு பயிற்சியோடு இந்த படத்துக்குள் வந்தார். ரசிகர்கள் படம் முடிந்து போகும்போது சீதக்காதி (விஜய் சேதுபதி) கதாபாத்திரத்தை மட்டுமல்லாமல் இந்த வில்லன் கதாபாத்திரத்தையும் நினைத்துக் கொள்வார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பக்ஸ் கதாபாத்திரம் அளவுக்கு இந்த கதாபாத்திரமும் இருக்கும், பேசப்படும்", எனக் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X