அட்லி மட்டும் தான் 'அப்படி' செய்வாரா, சதீஷும் செய்வார்
Recommended Video

சென்னை: அட்லி பாணியில் சதீஷ், வைபவ் நடிக்கும் படத்தின் படக்குழு ஒரு காரியம் செய்துள்ளது.
வைபவ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் புதிய படத்திற்கு சூப்பராக இலவச விளம்பரம் தேடியுள்ளனர். சதீஷுக்கும், ஹீரோயினுக்கும் நிஜத்தில் திருமணம் நடந்தது போன்று வதந்தியை இயக்குனர் முத்தையா கிளப்பி விட்டார்.
சதீஷ் அந்த நடிகைக்கு தாலி கட்டுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்தார் முத்தையா.
படம்
படத்திற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து தான் இலவச விளம்பரம் கிடைக்க வேண்டும் என்று இல்லை. இப்படி பரபரப்பை ஏற்படுத்தியும் விளம்பரம் தேடலாம் என்பதை நிரூபித்துவிட்டனர். சதீஷுக்கு எப்பொழுது திருமணம் என்று எதிர்பார்த்தவர்கள் இந்த புகைப்படத்தை பார்த்ததும் உண்மை என்று நம்பிவிட்டனர்.

சதீஷ்
வைபவ், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தை பார்க்கும் ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது இதை எதிர்பார்த்து தானே வதந்தியை கிளப்பி விட்டிருப்பார்கள். சர்ச்சையான விஷயங்கள் எதையும் செய்யாமல் சதீஷை மாட்டிவிட்டு விளம்பரம் தேடிய படக்குழுவை பாராட்டியே ஆக வேண்டும்.

பரபரப்பு
நேற்று 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பரபரப்பு இருந்தது. அதற்கிடையேயும் மக்கள் சதீஷுக்கு திருமணமாகிவிட்டதா, பொண்ணு நல்லா இருக்கே என்று அந்த புகைப்படங்களை பார்த்திருக்கிறார்கள் என்றால் படக்குழுவின் ஐடியா ஒர்க்அவுட் ஆகிவிட்டது என்று தானே கூற வேண்டும்.
விளக்கம்
ஊரெல்லாம் தனக்கு திருமணமாகிவிட்டது என்று பேசியதை பார்த்த பிறகு சதீஷ் அது சும்மா, படப்பிடிப்பு என்று பின்னர் விளக்கம் அளித்தார். ராஜா ராணி படம் வெளியாவதற்கு முன்பு ஆர்யா, நயன்தாராவுக்கு திருமணம் என்பது போன்று விளம்பரம் செய்தார் அட்லி. அட்லி செய்ததை லைட்டா மாற்றி செய்துள்ளனர் அவ்வளவு தான்.


Click it and Unblock the Notifications











