பிரேம்ஜியிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த நடிகர்.. ஆத்தாடி இப்படியும் நடந்திருக்கா?.. செம பங்கம்
சென்னை: வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகர், இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரன் சமீபத்தில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் திருத்தணி முருகன் கோயிலில் எளிய முறையில் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு சாந்தமாக மாறியிருக்கும் பிரேம்ஜி கடைசியாக வல்லமை படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்நிலையில் அவர் குறித்து வைபவ் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் இசை குடும்பம் என்றால் அது இளையராஜாவின் குடும்பம். அவரும், அவரது சகோதரர் கங்கை அமரனும் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். கங்கை அமரனின் மகன்களில் வெங்கட் பிரபு லண்டனில் படித்துவிட்டு பிறகு இந்தியா வந்து நடிக்க ஆரம்பித்தார். ஜி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் சென்னை 600028 படத்தில் இயக்குநராக அறிமுகமானார். இப்போது கோலிவுட்டில் ஃபேமஸான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
பிரேம்ஜியின் பன்முக திறமை: அதேபோல் பிரேம்ஜியும் லண்டனுக்கு சென்று படித்துவிட்டு வந்து யுவன் ஷங்கர் ராஜாவிடம் வேலை செய்துகொண்டிருந்தார். பின்னணி பாடகராக இருந்த அவர், சிம்புவால் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு வெங்கட் பிரபுவின் படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். சில படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கி இன்னும் ரிலீஸாகாமல் இருக்கும் பார்ட்டி படத்துக்குக்கூட பிரேம்ஜி அமரன் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
முரட்டு சிங்கிள் பிரேம்: பிரேம்ஜி அமரனுக்கு 45 வயது ஆகிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டால், 'நான் ஒரு முரட்டு சிங்கிள்' என்றே கூறிவந்தார். அதுமட்டுமின்றி தான் அணிந்துவந்த டி ஷர்ட்டுகளிலும் முரட்டு சிங்கிள் என்ற வாசகம் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். மேலும் படு ஜாலியான ஆள் பிரேம்ஜி. வீக் எண்ட் ஆனால் பார்ட்டி, வீக் டேஸில் வேலை என்று இருந்தவர். எனவே பிரேம்ஜி திருமணமே செய்துகொள்ளமாட்டார் என்றே பலரும் நினைத்தார்கள்.

திருமணம்: சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணைத்தான் அவர் திருமணம் செய்திருக்கிறார். திருமணத்துக்கு பிறகு பார்ட்டிகள், அவுட்டிங் என அத்தனையிலிருந்தும் ஒதுங்கிவிட்டதாகவும்; குடும்ப பொறுப்பு கூடியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரேம்ஜி குறித்து நடிகர் வைபவ் கலகலப்பான ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.
வைபவ் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "G Pay அறிமுகமான புதிதில் பிரேம்ஜி என்னிடம் வந்து, ஜி பே என்றால் என்னவென்று கேட்டார். நான் உடனே என்ன ஜி பே என்றால் என்னவென தெரியாதா என கேட்டு அதை பற்றி விளக்கிவிட்டு 5,000 ரூபாயை அவர் நம்பருக்கு அனுப்பினேன். பிறகு பார்த்தியா இதுதான் ஜி பே. உன் வங்கி கணக்குக்கு 5,000 ரூபாய் வந்துவிட்டதா அவ்வளவுதான் என சொல்லிவிட்டு சென்றுவிட்டேன். அடுத்த நாள்தான் தெரிந்தது அய்யய்யோ நம்மிடமிருந்து 5,000 ரூபாய் போய்விட்டதே என்று" என்றார்.


Click it and Unblock the Notifications











