வைபவ், வாணி போஜன் நடிக்கும் படத்தின் சூட்டிங் தொடங்கியது!

சென்னை : இயக்குனர் ராதாமோகன் இயக்கும் புதிய திரைப்படத்தில் வைபவ் மற்றும் வாணி போஜன் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

காற்றின் மொழி படத்திற்குப் பிறகு இயக்குனர் ராதாமோகன் இயக்கும் இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

நடிகர் எம்எஸ் பாஸ்கர், மயில்சாமி, கருணாகரன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்து வர இதன் படப்பிடிப்பு இன்று விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது.

டூயட் மூவிஸ்

டூயட் மூவிஸ்

தனித்துவமான அதேசமயம் உணர்வுபூர்வமான திரைப்படங்களை இயக்குவதில் சிறப்பு மிக்கவராக இருந்து வரும் இயக்குனர் ராதா மோகன் அழகிய தீயே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த படத்தை பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

அபியும் நானும்

அபியும் நானும்

2007 ஆம் ஆண்டு ஜோதிகாவின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற மொழி திரைப்படத்தின் மூலம் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்ட இயக்குனர் ராதாமோகன் அதைத்தொடர்ந்து இயக்கிய அபியும் நானும் திரைப்படமும் மாபெரும் வெற்றிபெற இவரின் திரைப்படங்களை வயது வித்தியாசம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்க தொடங்கினர்.

பிரதிபலிப்பாக ஜோதிகாவை

பிரதிபலிப்பாக ஜோதிகாவை

மென்மையான கதைகளை உணர்வுபூர்வமாக எடுத்து அதை திரையில் கச்சிதமாக காட்டிவரும் ராதாமோகன் காற்றின் மொழி படத்தில் தனக்குப் பிடித்த துறையில் சாதிக்க துடிக்கும் பெண்களின் பிரதிபலிப்பாக ஜோதிகாவை கண்முன் கொண்டு வந்து அப்படியே நிறுத்தி கைத்தட்டல்களை பெற்ற இவர் இப்பொழுது வைபவ், வாணி போஜன் லீட் ரோலில் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

முக்கியமான வேடத்தை

முக்கியமான வேடத்தை

கலகலப்பான காமெடி திரைப்படமாக குடும்பங்கள் பார்க்கக்கூடிய மிகச்சிறந்த கதையை இயக்கி வரும் ராதாமோகன் இதிலும் தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான எம்எஸ் பாஸ்கருக்கு முக்கியமான வேடத்தை கொடுத்திருக்க இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

படப்பிடிப்பு தொடங்கியுள்ளது

படப்பிடிப்பு தொடங்கியுள்ளது

லாக்கப் திரைப்படத்தில் ஏற்கனவே இணைந்து நடித்திருந்த வைபவ் மற்றும் வாணி போஜன் இரண்டாம் முறையாக இணைந்து இந்த படத்திலும் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். பிரபல ஓடிடி நிறுவனமான ஜி5 ஒரிஜினல் நிறுவனம் வழங்க மங்கி மேன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இதில் நடிகர் கருணாகரன்,மயில்சாமி போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்க படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X