»   »  200 அரங்குகளில் வைகை எக்ஸ்பிரஸ்! #VaigaiExpress

200 அரங்குகளில் வைகை எக்ஸ்பிரஸ்! #VaigaiExpress

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர் கே நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான வைகை எக்ஸ்பிரஸ், இன்று 200-க்கும் அதிகமான அரங்குகளில் தமிழகத்தில் வெளியாகியுள்ளது.

மக்கள் பாசறை தயாரிப்பில், ஆர்கே - நீத்து சந்திரா, இனியா, கோமல் சர்மா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வைகை எக்ஸ்பிரஸ்.


Vaigai Express releasing in 200 plus screens

ஒரு சூப்பர் ஃபாஸ்ட் ஆக்ஷன் த்ரில்லராக வந்திருக்கும் இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார்.


தமிழகத்தில் மட்டும் இந்தப் படத்துக்கு 200 அரங்குகள் கிடைத்துள்ளன. இன்று மட்டும் 10 படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் அதிகபட்ச அரங்குகள் வைகை எக்ஸ்பிரசுக்குத்தான் கிடைத்துள்ளன.


படம் குறித்து சாதகமான பேச்சுகள் பரவி இருப்பதும், ஹிட் பாக்ஸ் சிஸ்டம் முறையில் ஏற்கெனவே இந்தப் படத்துக்கு 1 லட்சம் டிக்கெட்டுகள் விற்றிருப்பதும் படத்துக்கு நிச்சயமான ஓபனிங்கைத் தந்துள்ளது.

English summary
Shaji Kailash directed, RK starring Vaigai Express is releasing all over Tamil Nadu in 200 plus screens today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil