மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் வைகை புயல் வடிவேலு!
சென்னை : இயக்குனர் மாரி செல்வராஜ் இப்பொழுது துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார்
அதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை நடிக்க திட்டமிட்டுள்ளார்
நாய் சேகர் ரிட்டன்ஸ் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு இப்பொழுது மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் இணையும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சொல்லப்படாத மக்களின் வாழ்வியலை
இயக்கிய இரண்டே திரைப்படங்களில் இந்திய அளவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இயக்குனர் பா ரஞ்சித் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரி செல்வராஜ் அதன்பிறகு நீலம் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற அட்டகாசமான படத்தை இயக்கியிருந்தார். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக காட்டியிருந்த மாரி செல்வராஜுக்கு முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி கிடைத்தது

உண்மை சம்பவத்தை மட்டுமே
பரியேறும் பெருமாள் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல விருதுகளை இன்றுவரை குவித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தனக்கான ஒரு ஸ்டைலை வைத்துக்கொண்டு உண்மை சம்பவத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து படங்களை தொடர்ந்து இயக்கி வரும் மாரி செல்வராஜ் இப்பொழுது தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக விளங்குகிறார்.

கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கையை
பரியேறும் பெருமாள், கர்ணன் என இரண்டே திரைப்படங்களில் இப்போது முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் மாரி செல்வராஜ். அடுத்த படம் ஒரு கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வர முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக
அடுத்ததாக மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே துவங்க உள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் இணையும் புதிய திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்
நீண்ட காலமாக திரைத்துறையில் நடிக்காமல் உள்ள வடிவேலு இப்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். கதாநாயகியே இல்லாமல் இப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











