கலக்கல் கூட்டணியில் இணைந்த வைகைப்புயல்... அடுத்தக்கட்டத்துக்கு தயார்
சென்னை : வைகைப்புயல் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு வலம் வர அவர் தயாராகி வருகிறார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

வைகைப்புயல் வடிவேலு
வைகைப்புயல் வடிவேலு பல சிறப்பான படங்களை கொடுத்தவர். பல படங்களில் ஹீரோக்களை தாண்டி இவரது காமெடி பேசப்பட்டது. காமெடி நாயகனாகவும் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட படங்களில் நாயகனாக இவர் செய்த காமெடி கலாட்டாக்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

கேப் விட்ட வடிவேலு
இடையில் தவிர்க்க முடியாத காரணங்களால் இவர் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். இவரின் காமெடி கலாட்டாக்களை பார்க்க முடியாத ரசிகர்கள் இவரின் முந்தைய படங்களை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மீண்டும் இவர் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

மீண்டும் என்ட்ரி
சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் இவர் நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

மாமன்னன் படத்தில் வடிவேலு
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் காமெடி கேரக்டர்களில் நடிக்க இவர் கதைகளை கேட்டு வருகிறார். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் மாமன்னன் படத்திலும் இவர் காமெடி கேரக்டரை ஏற்றுள்ளார். இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வரும் நிலையில் உதயநிதிக்கு ஜோடியாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

சூட்டிங்கில் பங்கேற்பு
இந்நிலையில் மாமன்னன் படத்தின் சூட்டிங்கில் வடிவேலு கலந்து கொண்டார். அவருக்கு மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் மாலை அணிவித்து வரவேற்பு தெரிவித்தனர். வடிவேலுவுடன் இணைவது தனது நீண்ட நாள் கனவு என்றும் தன்னுடைய தொடர் கனவு நிறைவேறியுள்ளதாகவும் முன்னதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

ரசிகர்கள் உற்சாகம்
எப்போதும் காமெடி களமாக இருந்தாலும் ஹீரோவாக நடித்தாலும் தன்னுடைய கேரக்டர் பேசும்படி செய்பவர் வடிவேலு. இவரது இருப்பு தமிழ் சினிமாவில் இல்லாமல் அவரது ரசிகர்கள் தவித்து போனார்கள். இந்நிலையில் இவரது ரீ-என்ட்ரி அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் உற்சாகத்தை தந்துள்ளது.


Click it and Unblock the Notifications











