ஆஹா .. செம அப்டேட்டா இருக்கே.. ‘மாமன்னன்’ வடிவேலுவின் ரோல் இதுதான்!

சென்னை : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் குறித்து சுவாரசியமானத் தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி வேடங்களில் நடிக்க, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மாமன்னன்

மாமன்னன்

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மாரி செல்வராஜின் முந்தையை திரைப்படங்களைப் போலவே இந்த திரைப்படமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வைகை புயல்வடிவேலு

வைகை புயல்வடிவேலு

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து,அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில், வைகைப்புயல் வடிவேலு உதயநிதி ஸ்டாலின் தந்தையாக நடித்திருப்பதாகவும், அதுவும் ஒரு அரசியல்வாதி கதாபாத்திரம் என்றும், மாமன்னன் என்ற வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயர் தான் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

பாராட்டிய உதயநிதி

பாராட்டிய உதயநிதி

நீண்டநாட்களாக திரைப்படங்களில் எதிலும் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது, சினிமாவில் செகண்ட் இன்னிங்சை துவங்கியிருக்கிறார். இந்த மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலுவை ஒரு நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல், ஒரு குணசித்திர நடிகராகவும் நடித்துள்ளார். வடிவேலுவின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதை அடுத்து , அந்த படத்தில் வடிவேலுவின் காட்சிகளை பார்த்த உதயநிதி அவரை வெகுவாக பாராட்டினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை

ஏ.ஆர்.ரஹ்மான் இசை

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் மற்றும் செல்வா ஆர்.கே ஆகியோர் முறையே, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X