ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்.. அந்த பிரச்சனை இருந்தது.. அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை காவேரி பேட்டி!
சென்னை: சினிமாவில் பல நாட்களாக தென்படாமல் இருந்த நடிகை காவேரி மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
1990ம் ஆண்டு, ராதா பாரதி இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் வைகாசி பொறந்தாச்சு. இதில், பிரசாத், காவேரி, சுலோசனா, சின்னி ஜெயந்த் என பலர் நடித்திருந்தனர்.

தமிழில் வசூலை அள்ளிய இத்திரைப்படம், இந்தியில், ஐ லவ் யூ என்ற பெயரில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
நடிகை காவேரி: இந்த திரைப்படத்தில் அறிமுகமான நடிகை காவேரி, அதன்பிறகு, உன்னால் தான் நான் வாழ்கிறேன், பந்தய குதிரை, போக்கிரி ராஜா,சேதுபதி ஐபிஎஸ் போன்ற படங்களில் நடித்தார். அதன்பிறகு படவாய்ப்பு இல்லாததால், சின்னத்திரை பக்கம் கவனத்தை திருப்பி அடுத்தடுத்த சீரியல்களில் நடித்தார்.
மெட்டி ஒலி: சன் தொலைக்காட்சியில் மெட்டி ஒலி சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும், பிரபலமான காவேரி, அரசி, காவேரி, தங்கம், மீரா, கொடி முல்லை, வம்சம் போன்ற தொடர்களில் நடித்தார். வம்சம் தொடரில் நடித்துக்கொண்டிருந்த காவேரி திடீரென எங்கே போனார் என்று தேடும் அளவிற்கு சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
ரொம்ப உடைஞ்சு போய்டேன்: தற்போது கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு பிறகு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் எங்கும் ஓடிவிடவில்லை வம்சம் சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, அம்மா இறந்துவிட்டதால், ரொம்ப உடைஞ்சு போய்டேன். அந்த நேரத்தில் தான் எனக்கும் திருமணம் ஆனதால், சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தேன். அதுக்குள்ள வருஷம் கடகடவென்று ஓடிவிட்டது.
அந்த பிரச்சனை: வைகாசி பிறந்தாச்சு படத்தில் நடிக்கும் போது ஸ்லிம்மா இருந்தேன். இடையில் எனக்கு தைராய்டு பிரச்னை வந்ததால், எடை போட ஆரம்பித்தேன். அப்புறம் தியானம் எடுத்தேன், அது இன்னும் எடையை அதிகரித்துவிட்டது. 2010ல் தியானத்தை நிறுத்தினேன், அடுத்த 2 மாதத்தில் 8 கிலோ குறைந்துவிட்டது. ஆனால்,
நடிக்க ஆசை: மேலும், அஜித், விஜய், நயன்தாராக்கூட நடிக்க வேண்டும் என்று ஆசை ஆனால், இப்போ. எனக்கு ஹீரோயின் சான்சா தரப்போறாங்க? அண்ணியோ, அக்காவோ.. அது வசதி தான். சீரியலுக்கு நேரம் ஒதுக்க முடியாது. ஆனால், சினிமாவில் நடிக்கலாம் என்று நடிகை காவேரி மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











