கருணாநிதி நினைவிடத்தில் இருமகன்களுடன் வைரமுத்து மலர்தூவி மரியாதை!
திமுக தலைவருர் கருணாநிதியின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Recommended Video

கருணாநிதிக்கு வைரமுத்து மலர்தூவி மரியாதை!-வீடியோ
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து தனது இருமகன்களுடன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாலை காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு அண்ணா சாமதிக்கு பின்புறம் உள்ள இடத்தில் அரசு மரியாதையுடன் அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

இன்று காலை அவரது சமாதிக்கு சென்ற கவிஞர் வைரமுத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரது மகன்கள் மதன் கார்கியும், கபிலன் வைரமுத்துவும் உடன் இருந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

இதேபோன்று பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
More from Filmibeat
vairamuthu kabilan vairamuthu karunanidhi dmk dead வைரமுத்து கபிலன் வைரமுத்து கருணாநிதி திமுக மரணம் சமாதி மலர் அஞ்சலி


Click it and Unblock the Notifications











