பாவாடை தாவணி போய் சுடிதார் வந்ததும் நல்லதுதான்! - வைரமுத்து
தாவணி என்ற உடை வழக்கொழிந்துவிட்டதே என்று வருத்தம் வேண்டாம். சுடிதாரும் நல்லதுதான். பெண்களுக்கு பாதுகாப்பானதும் கூட, என்று கூறியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
ஈரோட்டில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசுகையில், "ஈரோட்டுக்கு நான் வந்ததால் பெருமை என்று இங்கு கூறினார்கள். இதை நான் ஏற்று கொள்ள மாட்டேன்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண் ஈரோடு. இந்த மண்ணுக்கு வர ஒவ்வொருவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஈரோட்டுக்கு வந்ததில் எங்களுக்குத்தான் பெருமை.
இளம் பெண்களின் பாரம்பரிய உடை பாவடை தாவணி இன்று வழக்கொழிந்து சுடிதார் உடை வந்து விட்டது. பாவாடை தாவணி போய்விட்டதே என்ற வருத்தம் வேண்டாம். நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப இந்த சுடிதார் உடை ஏற்புடையதாகிவிட்டது. இதனால் கலாச்சாரம் ஒன்றும் பாதிக்கப்படாது.
இன்னும் சொல்லப்போனால் இந்த சுடிதார் உடைதான் பெண்களுக்கு பாதுகாப்பானது. பெண்களின் கற்புக்கு இந்த சுடிதார் உடை அரணாக உள்ளது," என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியும் கலந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











