பலே பாலா, தம்பி ஜீ.வி! உன் ஜீவிதத்தில் ஒரு படம் இது: நாச்சியாரை பாராட்டிய வைரமுத்து
Recommended Video

சென்னை: நாச்சியார் படம் பார்த்த வைரமுத்து இயக்குனர் பாலாவை பாராட்டியுள்ளார்.
பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்த நாச்சியார் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸானது. படம் பார்த்தவர்களால் காத்து ஜி.வி. பிரகாஷ், ஜோதிகாவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் நாச்சியார் படத்தை பார்த்துள்ளார். படம் குறித்து அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
நாச்சியார் பார்த்தேன். கலையின் நிகழ் நீரோட்டத்தில் நிற்கிறீர்கள்; பலே பாலா! ஜோதிகாவின் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் காக்கிக்கே ஒரு கர்வம். நீங்கள் தொடர்ந்து கலையில் இயங்க வேண்டும் சகோதரி.
தம்பி ஜீ.வி! உன் ஜீவிதத்தில் ஒரு படம் இது; பாராட்டுகிறேன்.
ஒளிப்பதிவு செய்த ஈஸ்வர்! வெள்ளைக்காரக் கண்களோடு பிறந்த தமிழனப்பா நீ! படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











