Vairamuthu: பேரன், பேத்தியுடன் ஞானபீட விருது கொண்டாட்டம்.. வைரமுத்து பகிர்ந்த போட்டோஸ்!
சென்னை: தமிழ் பாடலாசிரியரும் எழுத்தாளருமான வைரமுத்துவிற்கு நாட்டின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை வைரமுத்து கொண்டாடும் வகையில் ஒரு போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கவிஞர் வைரமுத்துவுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வைரமுத்துவுக்கு திரையுலகை சேர்ந்த பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். வைரமுத்து இதற்கு முன்பு பத்மபூஷன், பத்மஸ்ரீ, சாகித்ய அகாடமி, கலை மாமணி விருது, பாவேந்தர் விருது, பாரதி இலக்கிய பரிசு போன்ற ஏழு விருதுகளையும், ஏழு தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
வைரமுத்துக்கு விருது: 2002 ஆம் ஆண்டு ஜெயகாந்தனுக்கு இலக்கியத்திற்கு ஆற்றியஅரிய பணியை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 24 ஆண்டுகள் கழித்து தற்போது கவிஞர் வைரமுத்து இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது அறிவிக்கப்பட்டதும் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் வைரமுத்துவை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி ஞானபீட விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். திரையுலகை சேர்ந்த பலரும் அவருதுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கொண்டாட்டம்: அதையடுத்து வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் "இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ஞானபீட விருது பெறுவதில் மகிழ்ச்சி. தமிழ்க் கவிதைக்கு ஞானபீட விருது கிடைக்கவில்லை என்ற குறை என்னால் கழிந்தது. இனி புதிய பாய்ச்சலுடன் என் இலக்கிய பணி தொடரும் என பதிவிட்டுவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது, தனது பேரக்குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, பேரன் பேத்தியின்
ஞானபீடக் கொண்டாட்டம் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











