இமயம் தொட்டு விட்டவன்.. எம்.பியாக பதவியேற்ற கமல்.. வாழ்த்து சொன்ன வைரமுத்து

சென்னை: நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்திவருகிறார். இப்போது சினிமாவிலும் அவர்து கவனம் அதிகம் இருந்தாலும் அரசியலிலும் இருந்துவருகிறார். சூழல் இப்படி இருக்க் அவர் ராஜ்ய சபா எம்.பியாக பதவியேற்றிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு பிரபல பாடலாசிரியரான வைரமுத்து தனது வாழ்த்தினை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறர்.

கமல்ஹாசன் சினிமாவிலிருந்து ஒதுங்கி மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். தொடங்கிய கையோடு மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால் அவரால் நினைத்த அளவுக்கு ஜொலிக்க முடியவில்லை. இதனையடுத்து மீண்டும் சினிமாவுக்கு வந்த அவர்; விக்ரம், இந்தியன் 2, தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்தார். சினிமாவில் அவர் பிஸியாக இருந்தாலும் அரசியலிலும் கவனம் செலுத்துகிறார்.

வைரமுத்து வாழ்த்து: அந்தவகையில் இப்போது திமுகவுடன் சுமூகமான உறவை பேணிவரும் கமல், ராஜ்ய சபா எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் அவருக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவருக்கு மட்டுமின்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் தனது வாழ்த்தை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நாடாளுமன்றம் சார்ந்து புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நண்பர்களையும் குறிப்பாக இருவரையும் பாராட்டுகிறேன்.

Vairamuthu congratulates Kamal on taking oath as Rajya Sabha MP
Photo Credit:

கலிங்கப்பட்டிச் சிங்கம்: ஒருவர் நாடாளுமன்றத்தை நிறைவுசெய்கிறவர்; இன்னொருவர் நாடாளுமன்றத்தில் நுழைவு செய்கிறவர் மனித உரிமைகளுக்கும் தமிழ் தமிழர் தமிழ்நாட்டு உரிமைகளுக்கும் சங்கு முழங்கிய கலிங்கப்பட்டிச் சிங்கம் வைகோ நிறைவுபெறுகிறார் அவருக்கு நாடே ஊராக இருந்தது; நாடாளுமன்றமே வீடாக இருந்தது அவர் நெகிழ்ச்சியோடு விடைபெறுவதில் நெஞ்சு குழைந்தது; வாழ்த்துகிறேன்.

இமயம் தொட்டு விட்டவன்: நுழைவு செய்கிறவர் நண்பர் கலைஞானி கமல்ஹாசன் "நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டு விட்டவன் பகையை முட்டி விட்டவன் தீயைச் சுட்டு விட்டவன்" 40 ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய வரிகளுக்கு இன்று நியாயம் செய்திருக்கிறார் அவரும் அனைத்து உறுப்பினர்களும் தமிழில் உறுதிமொழி பூண்டது எங்கள் புத்துணர்ச்சிக்குப் புதுரத்தம் பாய்ச்சியது.

நன்மை எழுதட்டும்: வாழ்க! உங்கள் நாடாளுமன்ற நாட்கள் நாட்டுக்கு நன்மை எழுதட்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். கமல்ஹாசன் நடித்த விக்ரம், தசாவதாரம், புன்னகை மன்னன், வசூல்ராஜா எம்பிபிஎஸ், விஸ்வரூபம், ஆளவந்தான் என பல படங்களுக்கு வைரமுத்து பாடல்கள் எழுதியிருப்பதும்; அந்தப் பாடல்கள் அனைத்துமே காலங்கடந்து கொண்டாடப்படுவதும் நினைவில் கொள்ளத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X