கருணாநிதியின் உடலை பார்த்ததும் துக்கம் தாங்காமல் கதறி அழுத வைரமுத்து
Recommended Video

கருணாநிதியின் உடலை பார்த்ததும் துக்கம் தாங்காமல் கதறி அழுத வைரமுத்து
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நேரில் பார்த்ததும் கவிப்பேரரசு வைரமுத்து கதறி அழுதுவிட்டார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

கவிப்பேரரசு வைரமுத்து தனது குடும்பத்துடன் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் உடலை சற்று தூரத்தில் பார்த்ததுமே அவர் கதறி அழத் துவங்கிவிட்டார்.
கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை பிடித்துக் கொண்டு அழுதார் வைரமுத்து. கருணாநிதியின் உடல் அருகே நின்று கொண்டிருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினை பார்த்ததும் அவரை கட்டிப்பிடித்து அழுதார்.
கருணாநிதிக்கு நெருக்கமானவர்களில் வைரமுத்துவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications