வைரமுத்து கவிதை சொல்வார் தெரியும்...இவ்வளவு அழகா கதையும் சொல்றாரே

சென்னை : ஆஸ்கர் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட ஆங்கில படத்தின் கதையை அழகு தமிழில், தனக்கே உரிய கவிதை நயத்துடன் சொல்லி இருக்கிறார் கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து. இதனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

2022 ம் ஆண்டின் ஆஸ்கர் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட படங்களின் இறுதிப் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. மொத்தம் 23 பிரிவுகளின் கீழ் இந்த விருது பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன. இதில் மற்ற பிரிவுகளின் கீழ் தலா ஐந்து பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சிறந்த படத்திற்கான பிரிவில் மட்டும் 10 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

வைரமுத்து சொன்ன கதை

வைரமுத்து சொன்ன கதை

இந்த பிரிவில் சூர்யாவின் ஜெய்பீம் படம் இடம்பெறும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்காமல் போனது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. சிறந்த படத்திற்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களில் Don't Look up படமும் ஒன்று. இந்த படத்தின் கதையை தான் கவிஞர் வைரமுத்து, கவிதை நடையில், மிக அழகாக கூறி உள்ளார்.

Don't Look Up கதை

Don't Look Up கதை

வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில்,

விண்கோள் ஒன்று
மோதப்போவதால்
பூமி
சிதறப்போகிறதென்று
பதறிச் சொல்கிறார்கள்
நாசா விஞ்ஞானிகள்

அமெரிக்க ஜனாதிபதி
சிகரெட் பிடித்துக்கொண்டே
சிரிக்கிறார்

உலகம்
நகையாடுகிறது

கடைசியில்
அது நிகழ்ந்தே விடுகிறது

அழகான ஆங்கிலப் படம்
Don't Look Up
(மேலே பார்க்காதே)

நீங்கள் மேலே பாருங்கள்

இவ்வாறு வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். படத்தின் போஸ்டருடன் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்வீட்டை பலரும் பாராட்டி உள்ளனர்.

குவியும் பாராட்டுக்கள்

குவியும் பாராட்டுக்கள்

நீங்கள் ஆங்கில படங்களை அவ்வப்போது பார்க்கிறீர்கள் என்பது சூப்பர் ( பார்த்த படத்தை மற்றவர்களுக்கு சிபாரிசு செய்வது கூடுதல் மகிழ்ச்சி) புத்தகம் வாசிக்க நேரம் இல்லை என்று சொல்லும் பலர், இப்படி நல்ல படங்களை உங்கள் Reference மூலம் பார்க்க துவங்கட்டும். நல்ல பதிவு சார். இந்த படம் சிறப்பான படம்... இறுதியில் குடும்பம் முக்கியம் குடும்பத்தாருடன் இருக்க வேண்டும் என வைத்திருக்கும் காட்சி சிறப்பு ஐயா. கவிப்பேரரசை கவர்ந்த படம். எங்களை கவராமலா போய்விடும்? பார்ப்போம் மேலே என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

ஆஸ்கர் விருது பெறுமா

ஆஸ்கர் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட படங்களின் மீது மார்ச் 17 ம் தேதி துவங்கி மார்ச் 22 வரை ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த ஓட்டுக்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் படங்களுக்கு மார்ச் 27 ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஆஸ்கர் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் வைரமுத்து பரிந்துரைத்த இந்த படம் விருது பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X