வைரமுத்து பொம்பள புள்ளைய தானே ரூமுக்கு கூப்பிட்டார், என்ன தப்பு: நடிகர் திமிர் பேச்சு
Recommended Video

சென்னை: வைரமுத்து சின்மயியை தனது ஹோட்டல் அறைக்கு வருமாறு கூறியதில் என்ன தவறு என்று கேட்டுள்ளார் நடிகர் மாரிமுத்து.
கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவரின் அக்காவின் கணவராக நடித்தவர் மாரிமுத்து. வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்துள்ளது குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

சின்மயி
ஒரு பொம்பள புள்ளையை ரூமுக்கு வா என்று கூப்பிட்டிருக்கிறார். ஆம்பள தானே அவர். இதில் என்ன தப்பு இருக்கிறது?. கூப்பிடட்டும். உனக்கு இஷ்டமிருந்தால் போ, இல்லை என்றால் பத்திரிகையிடம் சொல்கிறார், சொல்லிட்டுப் போ. ஒரு ஆம்பள தானே அவர். அவருக்கும் ஹார்மோன்ஸ் இருக்கிறதல்லவா.

கவிஞர்
ஒரு பொம்பள பிள்ளையை கட்டிப்பிடித்து படுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் அல்லவா. அதனால் தான் கூப்பிடிருக்கிறார். அந்த பொம்பள வெளியே சொல்லியிருக்கிறாள். இதை கவிஞர் தாங்கித் தான் ஆக வேண்டும். அதன் உண்மை நிலையை தேடி நான் போக விரும்பவில்லை. இன்னும் 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் கழித்து அது மறந்துவிடும். வேறு பிரச்சனை வந்துவிடும்.

நாய்
இந்த விஷயத்தை மறந்துவிட்டு வேறு பிரச்சனை குறித்து பேச ஆரம்பித்துவிடுவோம். இதனால் கவிஞருக்கு இழுக்கு என்று நான் சொல்லவே மாட்டேன். ஒரு பெண்ணை தானே ரூமுக்கு வான்னு கூப்பிட்டார். ஒரு ஆம்பளையை கூப்பிட்டால் தான் அசிங்கம். காரில் செல்லும்போது ஒரு நாய் குறுக்கே வருகிறது. டக்கென்று பிரேக் போடும்போது பின்னால் வந்த சைக்கிள் காரன் இடித்துவிட்டான். அவனுக்கு ஒரு சாரி சொல்லிவிட்டு நாய்க்கு ஒரு சாரி சொல்லிவிட்டு செல்வது போன்று தான் இந்த சம்பவம். இது ஒரு சின்ன தடுமாற்றம், அவ்வளவு தான் என்கிறார் மாரிமுத்து.
விமர்சனம்
மாரிமுத்துவின் பேச்சை பார்த்த நெட்டிசன்கள் துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சித்தார்த்
மாரிமுத்துவின் மோசமான பேச்சை கேட்டுவிட்டு ச்சீ என்று விளாசியுள்ளார் நடிகர் சித்தார்த்.


Click it and Unblock the Notifications











