twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து

    By Siva
    |

    சென்னை: நல்லை அல்லை என்ற பாடல் மூலம் சங்க இலக்கிய வார்த்தையை கம்ப்யூட்டர் யுகத்தில் பிரபலமாக்கியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

    கவிப்பேரரசு வைரமுத்து தனது பாடல் வரிகைளில் சங்க கால சொற்களை சேர்ப்பதில் வல்லவர். நறுமுகையே, அற்றைத் திங்கள் ஆகிய சங்க இலக்கிய சொற்களை மறுபடியும் நம்மை முணுமுணுக்க வைத்தவர் வைரமுத்து.

    Vairamuthu does it again

    இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்திலும் சங்க இலக்கிய வார்த்தையை பயன்படுத்தி பாடல் எழுதியுள்ளார் வைரமுத்து.

    நல்லை அல்லை என்ற பாடல் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ளது. நல்லை அல்லை என்றால் நல்லதுக்கு இல்லை, நல்லதில்லை, நன்மை தருவதில்லை என்று அர்த்தம்.

    அந்த வார்த்தை குறுந்தொகையின் 47வது பாடலில் வரும். அந்த பாடலை எழுதியவர் நெடுவெண்ணிலவினார். தந்தை சங்க இலக்கிய வார்த்தைகளை பிரபலமாக்குகிறார். அவர் மகன் மதன் கார்க்கியோ மாடர்ன் வார்த்தைகளை பிரபலமாக்குகிறார்.

    English summary
    Lyricist Vairamuthu has done it again in Mani Ratnam's Kaatru Veliyidai. Vairamuthu has used ancient literature word Nallai Allai in his song for Karthi starrer movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X