twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரதிராஜா படத்துக்கு பாட்டெழுதும் போது கண்ணீர் சிந்தினேன்.. வைரமுத்து உருக்கமான ட்விட்டர் பதிவு!

    |

    சென்னை: நாட்படு தேறல் இரண்டாம் பருவத்தின் ஆறாம் பாடல் வெளியீட்டு பணிகள் ஒருபக்கம், இன்னொருபுறம் பாராதிராஜா நடித்து வரும் புதிய படத்துக்கு பாட்டு எழுதும் பணி என பரபரப்பாக வேலை பார்த்து வருகிறார் வைரமுத்து.

    ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்படு தேறலின் புதிய பாடல்களை வெளியிட்டு வருகிறார் வைரமுத்து.

    இந்த வாரம் 'ஒரு ஜப்பானிய மீனைப்போல்' எனும் வித்தியாச வரிகளுடன் இளமை துள்ளும் காதல் பாடலை உருவாக்கி உள்ளார் வைரமுத்து.

    Vairamuthu done lyrics with tears for Barathiraja’s upcoming film

    வரும் ஞாயிற்றுக்கிழமை இசையரவி தொலைக்காட்சியில் மதியம் 1.30 மணிக்கும், கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 5.30 மணிக்கும் அந்த பாடல் ஒளிபரப்பாகவுள்ளது.

    அந்த ட்விட்டர் பதிவை தொடர்ந்து இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா நடித்து வரும் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' என்கிற படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையில் பாடல் எழுதி வருகிறார் வைரமுத்து அது தொடர்பான அறிவிப்பையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

    "பாரதிராஜா நடிக்க

    தங்கர்பச்சான் இயக்க

    ஜி.வி.பிரகாஷ் இசைக்கும் படம்

    'கருமேகங்கள் ஏன் கலைகின்றன'

    பாட்டெழுதும்போதே

    சொல்லோடு கசிந்தது கண்ணீர்

    விழுமியங்கள்

    மாறிப்போன சமூகத்திற்கு

    என்னோடு அழுவதற்குக்

    கண்ணீர் இருக்குமா?

    இல்லை...

    கண்களாவது இருக்குமா?

    பார்ப்போம்."

    என அது தொடர்பான அறிவிப்பை கவிதை வடிவிலே சொல்லி உள்ள வைரமுத்து, அந்த வரிகளை எழுதும் போது தனது கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Vairamuthu done lyrics with tears for Barathiraja’s upcoming film

    English summary
    Vairamuthu done lyrics with tears for Barathiraja’s upcoming film Karumegangal Yen Kalaiginrana written and directed by Thangar Bachan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X